Poonam Pandey : கூகுளில் ட்ரெண்டான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்..பூனம் பாண்டேவின் செயலுக்கு குவியும் ஏச்சுக்களும், பாராட்டுக்களும்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகை பூனம் பாண்டேவின் செயல் பாராட்டு பெற்று வருகிறது
![Poonam Pandey : கூகுளில் ட்ரெண்டான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்..பூனம் பாண்டேவின் செயலுக்கு குவியும் ஏச்சுக்களும், பாராட்டுக்களும் poonam pandey awareness on cervical cancer by faking her death gets praises Poonam Pandey : கூகுளில் ட்ரெண்டான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்..பூனம் பாண்டேவின் செயலுக்கு குவியும் ஏச்சுக்களும், பாராட்டுக்களும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/32679d0683e12261e3a7d2024fedf0f51707041939372572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தான் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை பெற்றுவந்த நடிகை பூனம் பாண்டேவுக்கு தற்போது பாராட்டுகள் அதிகரித்து வருகின்றன
பூனம் பாண்டே
சர்ச்சைக்குரிய நடிகையாக பாலிவுட் உலகில் வலம் வந்த பூனம் பாண்டே, உயிரிழந்துவிட்டதாக கடந்த 2 ஆம் தேதி தகவல் வெளியானது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். 32 வயதான பூனம் பாண்டே உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் புரட்டிப்போட்டது. பலராலும் இந்த தகவலை ஏற்றுக்கொள்ளவே இல்லை. சிலர் இது பொய் எனவும் கூறி வந்தனர். இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாக பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் கர்ப்பவாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் இப்படி செய்ததாக பூனம் பாண்டே கூறினார். ”முக்கியமான ஒன்றை உங்களஅனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன் . நான் உயிருடன்தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை. ஆனால் சோகம் என்னவென்றால், இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் இந்நோய் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைக் கொன்றுள்ளது. மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது. HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் இதில் முக்கியமானது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. விமர்சன விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் மேம்படுத்தி ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என தெரிவித்துள்ளார்.
திட்டி தீர்த்த நெட்டிசன்கள்
இதனைத் தொடர்ந்து பூனம் பாண்டேவின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படியா செய்வார்கள் என்று பலரும் அவரை விமர்சித்தார்கள். மேலும் இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்றும் அனைவரும் பூனம் பாண்டேவை கடுமையாக சாடினார்கள். பாடகர் சின்மயி உட்பட பலரும் அவரது இந்த செயலுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மேலும் இதனை கண்டிக்கும் வகையில் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
பாராட்டுகளாக மாறிய விமர்சனங்கள்
View this post on Instagram
ஒரு பக்கம் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது பூனம் பாண்டேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. Schbang என்கிற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பூனம் பாண்டே இந்த விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டார். தற்போது அந்நிறுவனம் நடிகை பூனம் பாண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து தகவல் வெளியிட்டுள்ளது.
”கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோதும் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவரது இந்த செயலால் இதுவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரியாதவர்கள் கூட இதுபற்றி கூகுளில் தேடி இருக்கிறார்கள். கூகுளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி பல்லாயிரத்திற்கும் மேல் அதிகமான முறை தேடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பூனம் பாண்டேவின் செயலால்தான் இன்று இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது” என அவரை பாராட்டியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)