Year Ender 2022 : நயன்தாரா முதல் காஜல் அகர்வால் வரை; 2022 இல் குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா தம்பதிகள்!
2022 இல் குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா தம்பதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்
1.நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணமானது. இதனை தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி இந்த தம்பதி பெற்றோராகினர்.வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டனர். இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து,அவர்கள் 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் ,ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் தாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் கூறினர்.
2.விசாகன் - சவுந்தரியா ரஜினிகாந்த் தம்பதி கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ' வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி' என பெயர் சூட்டினர். சவுந்தரியாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவருடன் திருமணமானது.கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்தானது.
3.அலியாபட் - ரன்பீர் கபூர் தம்பதி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு 'ராஹா' எனப் பெயர் சூட்டினர்.
4.'கைதி'நரேனுக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
5.காஜல் அகர்வால் - கவுதம் தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது.இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ' நீல்'என பெயரிட்டுள்ளனர்.
6.பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமானது.இவர்கள் இந்த ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர்.
7.சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா தம்பதிக்கு 2018 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி குழந்தை பிறந்தது.குழந்தைக்கு வாயு என பெயர் சூட்டியுள்ளனர்.