Thangalaan : கோடிகளை கொட்டிய பிரபல ஓடிடி நிறுவனம்.. உரிமையை கொடுத்த ‘தங்கலான்’ .. இதுதாங்க அப்டேட்!
நடிகர் விக்ரமின் தங்கலான் படத்தின் டிஜிட்டல் உரிமமானது 35 கோடி ரூபாய்க்கு விற்றுபோனதாக தகவல் வெளியாகிவுள்ளது

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பின் விக்ரம் நடிக்கும் சியான் 61 இல் கமிட் ஆனார் பா.ரஞ்சித். இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க விருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விக்ரமின் 61 வது படமான தங்கலான், 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வரும் கதையாகும். படத்தின் லொக்கேஷன்களுக்காக பா.ரஞ்சித்தும் அவரது குழுவும் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஷூட்டிங் தொடங்கிய போது படத்தில் நடிகர் பசுபதியும் இணைந்தார். இதற்கடுத்தபடியாக மதுரையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வந்துகொண்டிருந்த நிலையில், தங்கலானின் அதிகாரபூர்வமான டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அந்த டீசர் காட்சியில், விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கெட்-அப் மெய் சிலிர்க்க வைத்தது.
இந்தநிலையில், இந்தப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் 35 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த படத்தின் நாயகனான விக்ரம், தாடியும் மீசையுமாக ரக்கட் லுக்கில் உள்ளார். தற்போது இந்த தோற்றத்தில் இருக்கும் விக்ரம், பல போட்டோஷூட்களை நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட அந்த போட்டோக்களை இவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வர, அவை அனைத்தும் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்தப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு பின்னர் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பான் - இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இந்தப்படம் 2டி மற்றும் 3டியில் உருவாக்கப்பட உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படம் 2023ல் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Sardar OTT : ஒரு மாசம் கூட முடியல.. அதற்குள் சர்தார் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. முழுவிபரம் உள்ளே!





















