![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Notice to Sathyam Cinemas: சத்யம் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய சிஎம்டிஏ - சீல் வைக்கப்பட்டதா?
சத்யம் சினிமாஸ் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிக்கு சீல் வைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் நேற்று தகவல் வெளியானது.
![Notice to Sathyam Cinemas: சத்யம் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய சிஎம்டிஏ - சீல் வைக்கப்பட்டதா? Chennai: Royapettah Sathyam Cinemas receives Notice for violating construction Rules Notice to Sathyam Cinemas: சத்யம் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய சிஎம்டிஏ - சீல் வைக்கப்பட்டதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/8e0f5e5d3d25a80f1d0d88285871b8b4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் பிரபலமான தியேட்டரான சத்யம் தியேட்டர், அனுமதி மீறி கூடுதலாக கட்டடங்கள் கட்டியதாக சிஎம்டிஏ, தியேட்டர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் மிகவும் பிரபலமான தியேட்டரில் ஒன்றாக விளங்குவது சத்யம் சினிமாஸ். முக்கிய நகரான ராயப்பேட்டை திருவிக சாலையில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது. இந்த தியேட்டரை சமீபத்தில்தான் பிவிஆர் சினிமாஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சத்யம் சினிமாஸ் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிக்கு சீல் வைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் நேற்று தகவல் வெளியானது. இது சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், “சத்யம் சினிமாஸ் தியேட்டர் வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆர்டிஐ கீழ் கேட்கப்பட்டது. முதலில் கட்டிய கட்டிடத்துக்கு அனுமதி வாங்கியுள்ள நிர்வாகம், கூடுதல் கட்டடம் கட்ட அனுமதி பெறவில்லை. இதனைத்தொடர்ந்து, ஆர்டிஐயில் தகவல் கொடுத்தோம். பின்னர், இதுதொடர்பாக முதன்மை தகவல் ஆணையரிடம் இந்த விவகாரம் சென்றபோது, ஆணையர் நோட்டீஸ் கொடுக்குமாறு பரிந்துரைத்தார். ஆனால், அதற்கு முன்னதாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் 113 சி சட்டப்படி வரன்முறை செய்ய விண்ணப்பித்துள்ளனர். எனவே கட்டடத்துக்கு சீல் வைக்கமுடியாது. வரன்முறை செய்யவிண்ணப்பித்து இருப்பதால் நோட்டீஸ் திரும்ப்பெறப்படும்” என்று கூறினார்.
அச்சு அசல் ஷாருக்கான் மகளை போல தோற்றம்... இன்ஸ்டாவில் குவியும் ரசிகர்கள்!https://t.co/AH3LSoP723#Sharukkhan #Daughter #LookAlike
— ABP Nadu (@abpnadu) October 20, 2021
Pa. vijay Birthday special : மூத்தோரின் பக்குவம்... இளையோரின் குறும்பு... கவிஞனின் செந்தமிழ்...பா.விஜய்!https://t.co/0Y3a3oWrH2#HBDPaVijay #Tamil #Movies
— ABP Nadu (@abpnadu) October 20, 2021
Bigg Boss 5 Tamil Promo: ‛பண்ணீங்களா இல்லையா பிக்பாஸ்...’ வெடித்த சுருதி... முரண்பிடிக்கும் அபிஷேக்!https://t.co/XycDq91yBW#BigBoss #BigBossTamil5 #Promo
— ABP Nadu (@abpnadu) October 20, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)