Captain Miller: ‘ரெடியா இருங்க.. தரமான சம்பவம் காத்திருக்கு’ ... ரசிகர்களுக்கு அப்டேட் விட்ட தனுஷ்..என்னன்னு தெரியுமா?
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு ஒன்றை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![Captain Miller: ‘ரெடியா இருங்க.. தரமான சம்பவம் காத்திருக்கு’ ... ரசிகர்களுக்கு அப்டேட் விட்ட தனுஷ்..என்னன்னு தெரியுமா? Captain Miller Update First Look Poster Very Soon Dhanush Message Made Fans Happy Captain Miller: ‘ரெடியா இருங்க.. தரமான சம்பவம் காத்திருக்கு’ ... ரசிகர்களுக்கு அப்டேட் விட்ட தனுஷ்..என்னன்னு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/219e91dfa6dad66041c122814bffe79c1687672910007572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு ஒன்றை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள தனுஷ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு நானே வருவேன் படம் வெளியானது. தொடர்ந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கைன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இதனிடையே கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பெரும் சர்ச்சைகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என கூறப்படும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் வருகிறது. இதனால் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
Captain Miller first look ⏳
— Dhanush (@dhanushkraja) June 25, 2023
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகி கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.இதனால் இந்த மாதம் தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)