Captain Miller: தனுஷ்தான் முன்மாதிரி : புகழ்ந்து தள்ளிய சிவராஜ்குமார்.. அதிர்ந்த நேரு ஸ்டேடியம்
கேப்டன் மில்லர் குழுவில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் - சிவராஜ்குமார்
நடிகர் தனுஷின் அசுரன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என நான் நினைப்பதாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் நடிகர் தனுஷை வைத்து தயாரித்துள்ள படம் “கேப்டன் மில்லர்” . இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடரி, பட்டாஸ்,மாறன் ஆகிய படங்களுக்குப் பின் சத்யஜோதி மீண்டும் படம் தயாரித்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ராக்கி, சாணி காயிதம் படம் எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சிவ்ராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், “தனுஷூடன் நடிக்க வேண்டும் என்றால் கதை கூட கேட்க மாட்டேன்” என நெகிழ்ச்சியாக கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம், “தனுஷின் ஒரு படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணி நடிக்க வேண்டும் என்றால் எதை தேர்வு செய்வீர்கள்?” என்ற கேள்வியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கேட்டார்.
Shivanna is just 💥💥💥#Shivanna #CaptainMiller#ShivaRajkumar #CaptainMillerAudioLaunch#Dhanushpic.twitter.com/BW6RO0YoRR
— AppuCult ⚡️ (@Powerstar_17) January 3, 2024
அதற்கு சற்றும் யோசிக்காமல் பதில் சொன்ன சிவராஜ்குமார், “எனக்கு அசுரன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதில் ஒரு மதிப்புமிக்க கருத்து ஒன்று உள்ளது. குடும்பத்தின் மீதான மரியாதை, குழந்தைகள் மீதான கவனம் என்பது பொறுப்புமிக்க ஒன்று. அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் திடீரென அப்படி ஒரு கேரக்டரில் நடிப்பது எல்லாம் சுலபமான செயல் இல்லை. அதை தனுஷ் எளிதாக செய்தார்.
அந்த கேரக்டரை வெளிப்படுத்திய விதம் பிரமாதமாக இருந்தது. நான் அப்படிப்பட்ட வயதான கேரக்டர் செய்ய வேண்டுமா என சில நேரங்களில் யோசிப்பேன். என்னை சுற்றியுள்ள சிலர் இப்பவே வயதான கேரக்டர்கள் வேண்டாம் என இயக்குநர்கள் சொல்வார்கள். நான் கடந்த 2022 ஆம் ஆண்டு எனது சொந்த தயாரிப்பாக வேதா என்னும் படத்தில் வயதான கேரக்டரில் நடித்திருந்தேன். அதில் அசுரனின் சாயல் இருக்கும்” என தெரிவித்தார்.
மேலும், ”கேப்டன் மில்லர் குழுவில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன் என்றும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு முத்தத்தை பரிசளிக்க வேண்டும்” என நினைப்பதாகவும் சிவராஜ்குமார் கூறினார். இது தனுஷ் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
அசுரன்
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் “அசுரன்”. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இப்படம் சிறந்த நடிகர், சிறந்த படம் என்ற பிரிவில் தேசிய விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.