Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
2024 ஆம் ஆண்டு முதலில் ரூ100 கோடி வசூல் இலக்கை எட்டும் முதல் தமிழ் படம் எதுவாக இருக்கும் ?
வசூலில் பின்தங்கிய கோலிவுட்
2024 ஆம் ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவிற்கு ஒரு சுமாரான ஆண்டாக அமைந்திருக்கிறது. பல்வேறு படங்கள் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தாமல் கொஞ்ச நாட்களில் திரையரங்கத்தை விட்டு வெளியேறுகின்றன
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , சிவகார்த்திகேயன் நடித்த அயலான் , ரஜினி நடித்த லால் சலாம் என அடுத்தடுத்த படங்கள் வெளியானாலும் வசூல் ரீதியாக இந்தப் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 5 மாதங்களில் கடந்துள்ள நிலையில் இன்னும் ஒரு படம் கூட ரூ.100 கோடி வசூல் இலக்கை எட்டவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது
வசூலில் கலக்கும் மலையாள சினிமா
மறுபக்கம் மலையாள படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலை கடந்து இந்த ஆண்டு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றன பிரேமலு 135 கோடி , மஞ்சுமெல் மாய்ஸ் 200 கோடி , ஆவேஷம் 125 கோடி , ஆடு ஜீவிதம் 100 கோடி என அடுத்தடுத்து நான்கு படங்கள் தோராயமாக 100 முதல் 200/ கோடி இலக்கை எட்டியுள்ளன.
இந்த ஆண்டு ரூ.100 கோடி இலக்கை முதலில் எட்டும் வாய்ப்பு எந்த தமிழ் படத்திற்கு இருக்கிறது என பார்க்கலாம்.
தங்கலான்
பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்திற்கே இந்த வாய்ப்பு அதிகம் என்று சொல்லலாம். வசூல் ரீதியாக சீயான் விக்ரமின் படங்கள் இதுவரை பெரிய இலக்கை தொட்டதில்லை என்றாலும் இது முதல் முறையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் சரித்திர கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் மீது பெரியளவிலான எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.
மேலும் படம் நிச்சயம் ஆஸ்கர் வரை செல்லும் என படக்குழு தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதில் இருக்கும் ஒரு சவால் படத்தின் ரிலீஸ் தேதி .
இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ஏப்ரல் மாதம் தள்ளிவைக்கப் பட்டது தங்கலான். ஆனால் தேர்தல் காரணமாக இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப் படாமல் உள்ளது. மேலும் படத்திற்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருந்தாலும் பான் இந்திய அளவில் ப்ரோமோஷன்களை படக்குழு செய்தால் மட்டுமே படம் இந்த இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.
இந்தியன் 2
ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வருவதால் இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் நீர்த்து போயுள்ளது எனலாம். மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை.
அதே பழைய ஷங்கர் படங்களின் ஊழலை ஒழிக்கும் கதை ஒரு வித்தியாசத்திற்கு அனிருத் இசை. படம் வெளியாகி சராசரிக்கும் மேலான விமர்சனங்களை பெற்றால் வசூலிலும் சாதிக்கும் என எதிர்பார்க்கலாம். 2.0 படத்தைப் போல் இந்த முறை பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக முடிசூடுவாரா கமல்??