Salman Khan: சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. திருமணம் என்றால் பயம்!
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மூளையில் வீக்கம் ஏற்படும் விநோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் பல சர்ச்சைகளிலும் சிக்குவதும் உண்டு. 59 வயது நிறைந்த இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலே முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை தழுவியது. இதுவதை சல்மான் கான் கரியரில் இப்படி ஒரு தோல்வி படம் அமைந்தது இல்லை என சினிமா விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.
ராஷ்மிகா மகளுடன் நடிப்பேன்
சிக்கந்தர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் மகள் வயதுடைய பெண்ணுடன் ஜோடியாக சல்மான் கான் நடிப்பது கேலிக்கூத்தாக்கப்பட்டது. இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த சல்மான் கான் ராஷ்மிகாவுடன் நடிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை. அவர் மட்டும் அல்ல அவரது மகளுடனும் நடிப்பேன் என பதில் அளித்தார். என்னுடன் நடிப்பதை பற்றி ராஷ்மிகாவிற்கு இல்லாத கவலை உங்களுக்கு என்ன என்றும் கேட்டார். மேலும் பொது இடத்தில் ராஷ்மிகா காரில் இருந்து வலுக்கட்டாயமாக இழுப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு
சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது உயிருக்கு பேரம் பேசும் அளவிற்கு பல சிக்கலிலும் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான் கான் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவரது வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு சல்மான் குண்டு துளைக்காத வகையில் கண்ணாடிகளை அமைத்தாக செய்திகள் வெளியானது. வீட்டில் இருப்பவரின் பாதுகாப்பை கருதி இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது.
சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா?
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் உடல்நிலை குறித்த செய்திகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பலரும் பலவிதமாக பேசி வருவது சர்ச்சையாக மாறியது. இந்த சூழலில் நடிகர் சல்மான் கான் தி கிரேட் இந்தியன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "எனக்கு டிரைஜீமினல் நியூரால்ஜியா என்ற நோய் இருக்கிறது. இதனால், எனது மூளை வீக்கம் அடைந்து முகம் சோர்வாக இருப்பது போல் தெரியும். இது ஒரு வகை நரம்பு வலியை ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 59 வயதிலும் வேலை செய்வதை நிறுத்தவில்லை ஓடிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வலியோடு போராடி கொண்டிருக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.
திருமணம் செய்வது கொஞ்சம் பயம்
ஆங்கிலத்தில் இந்த நோயுக்கு தற்கொலை நோய் என தெரிவிப்பார்கள். மேலும், தனது திருமணம் குறித்து பேசிய சல்மான் கான், நான் திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், இதை காரணம் காட்டி என்னை பிரிய முடிவெடுத்து என்னுடைய பாதி பணத்தை எடுக்க முடிவு செய்தால் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை. விவாகரத்து இன்று சர்வசாதாரணமாக நிகழ்கிறது. திருமணத்தில் புரிதல் அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.





















