Pandiyan Stores 2: ராஜீயை போலீஸ் ஆக்குவதில் தீவிரம் காட்டும் கதிர்; திட்டி தீர்த்த பாண்டியன்! பாண்டியன் stores 2 அப்டேட்!
எப்படியாவது ராஜீ போலீஸ் ஆக்க வேண்டும் என்பதற்காக அவரை ரூ.40 ஆயிரம் செலவு செய்து, கோச்சிங் கிளாசில் சேர்கிறார் கதிர். இதுகுறித்து இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்குறது . வழக்கத்திற்கு மாறாக இன்றைய எபிசோட் கொஞ்சம் ரொமான்ஸாக சென்றுள்ளது. அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்று 513ஆவது எபிசோடில், ராஜீ மற்றும் கதிர் இருவருக்கும் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கதிர் ராஜீயை Wife என்று கூப்பிடுவதை பார்த்து ராஜீ வெட்கத்தில் சிரிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
பின்னர் வீட்டிற்கு வரும் கதிர், ராஜீயை அழைத்து கொண்டு பயிற்சி மையத்திற்கு செல்கிறார். அங்கு படித்த எல்லோருமே போலீசாக ஆகியிருக்கிறார்கள். அதனால் ராஜீயும் அங்கு படிக்க வேண்டும் என்று கதிர் ஆசைப்படுகிறார். அதனால், அவரை அழைத்துக் கொண்டு அந்த செண்டருக்கு சென்று மற்ற விவரங்கள் குறித்து விசாரித்துள்ளார்.

எல்லாமே ஓகே தான், ஆனால், ராஜீ பீஸ் எவ்வளவு என்று கேட்க, அதற்கு ரூ.40 ஆயிரம் என சொல்கிறார். இதையடுத்து கதிருக்கு போன் போட்ட பாண்டியன் அவரை கடைக்கு வர சொல்லி திட்டுகிறார். கதிர் என்ன ஏது என்று தெரியாமல் திட்டுவதை எல்லாம் வாங்கி கொண்டு, குழப்பத்தோடு வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் ராஜீயும் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராஜீ இது எல்லாவற்றிற்கும் தான் நான் காரணம் என சொல்கிறார்.
அதன் பிறகு குமரவேலுவிடம் பேசியது பற்றியும், தனது அப்பாவிடம் கூறியது பற்றியும் எடுத்து கூறினார். இதனால், மனம் அமைதி கொண்ட கதிர் தனது தங்கை அரசிக்காக இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்தது எல்லாம் சரி தான். அதற்கு தன்னை ஏன் வில்லனாக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 513ஆவது எபிசோடு முடிவடைந்துள்ளது. இனி வரும் நாட்களில் ராஜீ - கதிரின் ரொமான்டிக் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















