Shah Rukh Khan: உலக பணக்கார நடிகர்..ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்! எத்தனை கோடி சொத்து?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் முறையாக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், உலகின் பணக்கார நடிகர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் முறையாக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், உலகின் பணக்கார நடிகர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார்.
பணக்காரர்கள் பட்டியலில் ஷாருக்கான்:
இந்தியாவின் பணக்காரர்களின் வருடாந்திர தரவரிசை பட்டியலை ஹுருன் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025 இன் படி, 59 வயதான நடிகர் ஷாருக்கான் இந்திய ரூபாய் மதிப்பில் 12,490 கோடியுடன் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இதன் மூலம் உலகின் பணக்கார நடிகர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
அந்த வகையில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், பாப் பாடகி ரிஹானா, கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் மற்றும் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் போன்ற உலகளாவிய பிரபலங்களை பின்னுக்குத்தள்ளியுள்ளார்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேல் சினிமாத்துறையில் இருக்கும் ஷாருக்கான் பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல் சினிமா திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்க்கத்தா நைட் ரைடரஸ் அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் அதிக வருவாய் இவருக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் இவருக்கு சொந்தமான சொகுசு பங்களாக்கள் இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையிலும் கொடிகட்டி பறக்கிறார். இப்படி இவரது சொத்து மதிப்பு மொத்தம் 12,490 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஹிருத்திக் ரோஷனுக்கும் இடம்:
இந்த பட்டியலில் பாலிவுட் பிரபலங்களில் நடிகை ஜூஹி சாவ்லா 7,790 கோடி சொத்து மதிப்புடன் இடம் பெற்றிருக்கிறார். அதேபோல், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2,160 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார். 1,880 கோடி ரூபாய் சொத்துடன் கரண் ஜோஹார் 1,630 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அமிதாப்பச்சன் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















