“பாலிவுட்டின் ஸ்டைல் ஐகான் “ - ரன்வீர் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல்!
ரன்வீர் சிங்கின் நடிப்பிற்கு சான்றாக ஏகப்பட்ட படங்கள் இருந்தாலும் பத்மாவதி திரைப்படத்தில் அவரது நடிப்பு அதிகமாக பாராட்டப்பட்டது.

ரன்வீர் சிங் இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர். பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களுள் ஒருவர். ரன்வீர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் கடந்து வந்த பாதையை அசைப்போடலாம்.
முதல் படத்திலேயே விருது !
ரன்வீர் சிங் இதே நாளில் 1985 ஆம் ஆண்டு பிறந்தார் . பெற்றோர் ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னனி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரியும் இருக்கிறார். ரன்வீர் இந்தியான பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர். சிறு வயதுலேயே மேடை நாடகம் , பள்ளி விழாக்கள் என நடிப்பு மீது அதீத ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். சினிமா மீது அதீத ஈடுபாடு கொண்டதால் தனது கெரியரை பாலிவுட் நோக்கி திருப்பினார். 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் சர்மா பாராத் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமனார். அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்த ரன்வீருக்கு முதல் படமே கம்ர்ஷியல் ஹிட்டானது. நகைச்சுவை காதல் படமான அந்த படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியதால் , அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது.
View this post on Instagram
விருதுகள் :
ரன்வீர் சிங்கின் நடிப்பிற்கு சான்றாக ஏகப்பட்ட படங்கள் இருந்தாலும் பத்மாவதி திரைப்படத்தில் அவரது நடிப்பு அதிகமாக பாராட்டப்பட்டது. அந்த படம் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. இதுவரையில் ரன்வீர் ஐந்து ஃபிலிம்பேர் விருதுகள், 6 சர்வதேச திரைப்பட விருதுகள், 4 ஸ்டார் கிரீன் விருதுகள், 2 ஸ்டார் டஸ்ட் விருதுகள் மற்று பல சின்னத்திரை விருதுகளை பெற்றுள்ளார்.
View this post on Instagram
ஃபேஷன் ஐகான் :
ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல் . பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார்.
View this post on Instagram
திருமணம் :
ரன்வீர் சிங் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை 2013 முதல் காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர். அப்போது இவர்களின் திருமணம்தான் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது.
View this post on Instagram





















