Bigg Boss 7 Tamil: ”மொத்த வீடுமே எனக்கு எதிராக இருக்கு” இந்த வார எலிமினேஷனில் வெளியேறப்போவது யார்?
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது வார எலிமினேஷனின் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது . கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், அனன்யா, ஜோவிகா , விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை , சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்திரா, நிக்ஸன், விஜய் வர்மா, உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதுவரை எட்டு நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் வீட்டில் பல்வேறு கருத்து மோதல்கள், மிரட்டல்கள், உணர்ச்சிவசமான தருணங்கள் என எல்லா எமோஷன்களும் கலந்து வருகிறது. அதே போல் போட்டியாளர்கள் வரம்பு மீறி போகும் தருணத்தில் வழக்கம் போல் கமல்ஹாசன் தனது ஸ்டைலில் போட்டியாளர்களுக்கு வார்னிங் கொடுப்பதையும் பார்த்தாகி விட்டது.
எலிமினேஷன்
இதில் முதல் வாரத்தின் எலிமினேஷனில் அனன்யா வெளியேறிய நிலையில் தற்போது எழுத்தாளர் பவா செல்லத்துரை உடல் நலத்தை காரணமாக சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது இரண்டாவது வார எலிமினேஷனில் வெளியேறப் போவது யார் என்கிற கேள்விக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் 8 ஆவது நாளுக்கான ப்ரோமோ எலிமினேஷனில் யார் நாமினேட் செய்யப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது.
ஒட்டுமொத்த வீடும் எனக்கு எதிராக இருக்கு
இந்த ப்ரோமோவில் இந்த வார எலிமினேஷனுக்கு பெரும்பாலானவர்கள் குறிப்பிடும் பெயர் விஷ்ணுவுடையதாக இருக்கிறது. விசித்திரா, ஜோவிகா, பூர்ணிமா ரவி, நிக்ஸன், மற்றும் விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் இந்த வார எலிமினேஷனில் விஷ்ணுவின் பெயரை குறிப்பிட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து மொத்த வீடுமே தனக்கு எதிராக இருப்பதாக விஷ்ணு கூறுகிறார்.
அவர் இந்த வீட்டில் இல்லாம இருந்தா நல்ல இருக்கும்
இதைத் தொடர்ந்து நாமினேஷனில் அடுத்ததாக அதிகம் சொல்லப்பட்ட பெயர் மாயா கிருஷணன். ஜோவிகா, யுகேந்திரன், வினுஷா தேவி மற்றும் ரவீனா உள்ளிட்டவர்கள் மாயா கிருஷ்ணனை நாமினேட் செய்துள்ளார்கள். குறிப்பாக மாயா கிருஷ்ணன் இந்த வீட்டில் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று ரவீனா கூறியுள்ளார்
#Day8 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 9, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/aiAqDXii3p
ஏதோ சுற்றுலா பயணம் வந்த மாதிரி இருக்காங்க
அடுத்ததாக நாமினேட் செய்யப்பட்டவர் நடிகை அக்ஷயா உதயகுமார். விஷ்ணு, கூல் சுரேஷ், ஐஷு உள்ளிட்டவர்கள் அக்ஷயாவை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்துள்ளார்கள். மேலும் அக்ஷயா ஏதோ இந்த வீட்டிற்கு சுற்றுலா வந்திருப்பவர் போல் நடந்துகொள்வதாக விஷ்ணு கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க : Board Exams: 10, 12ஆம் வகுப்புகளுக்கு இனி 2 பொதுத்தேர்வுகள்; யாருக்கெல்லாம்? - மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்