அந்த டெரர் ஐஸ்வர்யாவா இது... ஹாட் போட்டோக்களால் பத்தி எரியும் இன்ஸ்ட்டா!
Aishwarya Dutta: ஷோரீல் இதழின் அட்டைப் படத்திற்காக இந்த ஹாட்டான போட்டோ ஷூட் நிகழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. இந்த ஹாட் கிளிக்ஸ் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.
கவர்ச்சியின் உச்சத்தில் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா - ஹாட் கிளிக்ஸ்
தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து ஒரு படத்தில் நடித்தும் யார்க்கும் அடையாளம் தெரியாதவராக இருந்தவர் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பு மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா.
தமிழில் அறிமுகம்:
2015ம் ஆண்டு ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில், வி. சந்திரன் தயாரிப்பில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், பிந்து மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சற்று வித்யாசமான திரைக்கதை இருந்தால் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சில மியூசிக் விடியோக்கள் மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி:
பிக் பாஸ் சீசன் 2வில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா சிறப்பாக விளையாடி பைனல் ஸ்டேஜ் வரை சென்றார். இந்த நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா சிறந்த நண்பிகளாக இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சகா போட்டியாளரான ஷாரிக் உடன் நட்பு ஏற்பட்டது. ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சக போட்டியாளரான தாடி பாலாஜி மீது ஒரு டாஸ்க்கிற்காக குப்பையை கொட்டியது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தினாலும், ஒரு டாஸ்க்யை எப்படி செய்ய வேண்டுமோ அதற்கு உண்மையாய் செய்ததற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உலக நாயகன் கமல்ஹாசனிடம் இருந்து பாராட்டை பெற்றார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகை ரித்விகாவும் ரன்னர் அப் ஆக ஐஸ்வர்யாவும் ஜெயித்தார். இதன் மூலம் ஐஸ்வர்யா மிகவும் பிரபலமானார்.
View this post on Instagram
வைரல் ஹாட் கிளிக்ஸ்:
அவ்வப்போது ஐஸ்வர்யா கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை குளிரவைப்பார். அந்த வகையில் தற்போது ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதையும் பகிர்ந்துள்ளார். அது மிகவும் வைரலாகி இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ஷோரீல் இதழின் அட்டைப் படத்திற்காக இந்த ஹாட்டான போட்டோ ஷூட் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அந்த புகைப்படங்களுக்கு "இட்ஸ் ஆன். மேஜிக் நடக்க வேண்டிய நேரம்" என்று தலைப்பிட்டுள்ளார். இந்த ஹாட் கிளிக்ஸ் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.