Sembaruthi Serial | செம்பருத்தி சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் க்யூட் நடிகை.. இப்போவே ஹார்ட் விடும் ரசிகர்கள்..!
செம்பருத்தி சீரியல் புது கேரக்டரில் எண்ட்ரி கொடுக்கும் திருமதி ஹிட்லரின் மருமகளாக நடித்த பவ்யா ஸ்ரீ, இதில் எந்த கேரக்டரில் வலம் வரவுள்ளார் என்பதை அறிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, செம்பருத்தி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் தனது பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை இந்நிறுவனம் மேற்கொண்ட வரும் நிலையில் புதிய கோணத்துடன் சத்யா 2 மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி 2-ஐ ஒளிப்பரப்பிவருகிறது. இதோடு மட்டுமின்றி சமீபத்தில் பேரன்பு, தெய்வம் தந்த பூவே, வித்யா NO1, ரஜனி போன்ற சீரியல்களை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. முன்னதாக, மக்களிடம் இந்த சீரியல்கள் மிகவும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, பிரம்மாண்டமாக விழாவாக கொண்டாடப்பட்டது. அதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாயகிகள், புதிய சீரியல் நாயகிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு, ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
மேலும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4-ம் ஒருபுறம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்துவரும் செம்பருந்தி சீரியல் தற்போது தன்மை குறையாமல் ஒளிப்பரப்பாகிவருகிறது. குறிப்பாக தமிழக மக்களின் விருப்பமான தொடராக உள்ள செம்பருத்தி சீரியலில் வரக்கூடிய பார்வதிக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சனிஸ்வர தோசத்தினால் அகிலாண்டேஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வரும் நியைில், ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்பங்களுடன் கதைக்களம் நகர்ந்துவருகிறது. இப்பிரச்சனைத் தீர்க்க, ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல் ஹீரோயின்களும், தேவயானி உட்பட நவகிரக நாயகிகளாக வந்தக் காட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்த வரிசையில் தற்போது செம்பருத்தி சீரியலில் புது கேரக்டர்கள் எண்ட்ரி கொடுத்து வரும் நிலையில், தற்போது திருமதி ஹிட்லர் சீரியலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பவ்யா ஸ்ரீ இதில் எண்ட்ரி கொடுக்கிறார். திருமதி ஹிட்லரில் வரக்கூடிய மூன்று மருமகள்களில் மூத்த மருமகளாக வரும் பவ்யா ஸ்ரீயின் நடவடிக்கைகள் கூடுதல் அலப்பறையாக இருக்கும். இந்நிலையில் தற்போது செம்பருத்தி சீரியலில் நடிப்பதாகவும், அங்கு எடுத்துக்கொண்ட போட்டா இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
View this post on Instagram
செம்பருத்தி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வரும் நிலையில் பல்வேறு கமெண்ட்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர். “வில்லி கேரக்டரா? என்ன கேரக்டர் வேண்டுமானாலும் இருக்கட்டும் தயவு செய்து ஆதிக்கு மனைவி கேரக்டர் மட்டும் இருக்க கூடாது“ என பதிவிட்டுவருகின்றனர்.