bharathiraja: டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா... மருத்துவர்கள் சொன்னது இது தான்!
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவமனை அறிக்கையில், 81 வயதான பாரதிராஜா (81) கடந்த 26/08/2022 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆல்டர்ட் சென்சோரியம் (நுரையீரல் பாதிப்பு) பாதிப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை தேறியதன் காரணமாக டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
Medical Update on Director Bharathiraja, who is currently admitted at MGM Healthcare pic.twitter.com/ZTMWolNSZW
— MGMHealthcare (@MGMHealthcare) August 29, 2022
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அவருக்கு மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதாகவும், அப்பாவின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் அவரது மகனும், நடிகருமான மனோஜ் தெரிவித்திருந்தார். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாதெரிவித்ததோடு, தங்கள் வாழ்த்துகளையும் சமூக வலைத்தளங்களில் கூறினர். இதனையடுத்து பாராதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பாரதிராஜா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் மனோஜ், “ ஏ.சி சண்முகம், வைரமுத்து மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி. இக்கட்டான சூழ்நிலையில் அப்பாவை கொண்டுவந்தோம். நல்லமுறையில் மருத்துவர்கள் எங்களுக்கு திருப்பிக்கொடுத்துவிட்டார்கள். எங்களுக்கு பணப்பிரச்னை ஏதும் இல்லை. எங்களது பணத்தில்தான் அவரை பார்த்துக்கொண்டோம்.” என்று பேசினார்.





















