Bharathi Kannamma 2 : ஊர் சுற்றும் குடிகார பாரதி... ஜெயிலில் கண்ணம்மா... மாறுபட்ட கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா சீசன் 2 முதல் எபிசோட்
பாரதி கண்ணம்மா 2வது சீசன் முதல் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. மாறுபட்ட கதைக்களத்துடன் தொடங்கிய இந்த சீசனின் முதல் எபிசோடில் என்ன நடந்தது?
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடர் கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. உடனே பாரதி கண்ணம்மா சீசன் 2 இன்றுடன் தொடங்க உள்ளது. இந்த சீசன் பாரதியாக களம் இறங்குகிறார் சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான ரோஜா சீரியலில் கதாநாயகனாக நடித்த ஷிபு சூரியன்.
பாரதி கண்ணம்மா 2வது சீசனின் முதல் எபிசோடில் இன்று என்ன நடக்கப்போகிறது. அன்னவாக்கம் என்ற ஊரில் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் பாரதி. பணக்கார குடும்பத்தை சேர்ந்த மகன் தனது தந்தையின் பிசினஸை சரியாக பார்த்து கொள்ளாமல் எந்நேரம் குடித்துவிட்டு ஊதாரியாக ஊர் சுற்றி வரும் இளைஞன் பாரதி. பாரதியின் 25வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெரிய பெரிய தொழிலதிபர்கள், ஊர் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பாரதியை வாழ்த்த காத்து இருக்கிறார்கள். அவர்களை சந்திப்பதற்காக பாரதி அறையில் ரெடியாகி கொண்டு இருக்க அங்கு வருகிறான் பாரதியின் அத்தை மகன். ஊரில் இருக்கும் பெரிய மனுஷங்க எல்லாரும் வந்து இருக்கிறார்கள் அவர்களை பார்த்தால் நீ தடுமாறுவ அதனால் இந்தா இந்த சரக்க குடி என ஊற்றிக்கொடுக்கிறான்.
இந்த பாரதி கண்ணம்மா சீசன் வில்லி பாரதியின் அத்தைதான். அம்மாவிடமும் அத்தையிடமும் அம்மாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி கொள்ளும் பாரதி அவன் குடித்து இருப்பதை கத்தி எல்லாருக்கும் தெரிய வைச்சுடாதீங்க என அவர்களிடம் சொல்கிறான். வாழ்த்த வந்து இருந்த பெரியவர்கள் அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு எல்லாரும் சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என சொல்லி காரில் ஏறி ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறான். நல்ல மனசு கொண்ட பாரதி சகவாசம் சரியில்லாததால் இப்படி குடித்து விட்டு ஊர் சுற்றுகிறானே என வருந்துகிறார். அந்த சமயத்தில் உதவியாளர் ஒருவர் கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல பாரதியின் அம்மா நானும் அதை பற்றி தான் சிந்தித்து கொண்டு இருக்கிறேன் என கூறுகிறார்.
அந்த சமயத்தில் பாரதியை கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் எங்கு இருக்கிறாளோ தெரியவில்லை என சொல்லும் போது கேமரா ஜெயில் பக்கம் செல்கிறது. அங்கு சித்ரா என கதாபாத்திரமாக கண்ணம்மாவை ஜூம் செய்கிறார்கள். இன்னைக்கு உனக்கு ரிலீஸ் சித்ரா என சொல்லி அவரை வெளியே அழைத்து வருகிறார்கள். அந்த சமயத்தில் தனம் என்ற ஒரு பெண் எதிரில் வந்து நீ ரிலீஸாகி வெளியில சந்தோஷமா போற ஆனால் என்ன நிரந்தரமா இங்கேயே இருக்க வைச்சுட்டியே என கோபமாக பேசுகிறார்.
இந்த தனம் கதாபாத்திரமாக காட்டப்படுபவர் கஞ்சா விற்பவர் அதுவும் சிறையில் உள்ளேயே கஞ்சா விற்றதால் வாழ்க்கை முழுவதும் சிறையில் தண்டனை தான் அனுபவிக்க வேண்டும். பிறகு தனம் சிறையில் வார்டனிடம் சித்ராவை இன்னைக்கு நைட் முடிக்க ஏற்பாடுகள் செய்து இருக்கேன் இன்னைக்கு ராத்திரியுடன் அவ கதை முடிந்துவிடும் என சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. நாளை என்ன நடக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.