Beast | அப்படியே 4 நிமிஷம் நின்னேன்.... லைவ் செஷன்ல பீஸ்ட் அப்டேட் சொன்ன பூஜா ஹெக்டே..
இன்ஸ்டாகிராம் லைவில் விஜயின் பீஸ்ட் அப்டேட் கொடுத்தார் அத்திரைப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே.
தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே, இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற சாதனையை செய்துள்ளதை அடுத்து அவர் தனக்கு உதவியாக இருக்கும் நான்கு முக்கிய நபர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அறிமுகம் செய்தார், அப்போது தளபதி விஜய் ரசிகர்கள் 'பீஸ்ட்' அப்டேட் கேட்க, அதற்கு பதிலளித்தார்.
பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ஃபாலோவர்கள் சேர்ந்ததை அடுத்து தனது நன்றியை தெரிவித்துக்கொள்ளும் விதமான தனது டீம் மெம்பர்களை அறிமுகம் செய்தார். முதலாவதாக தனது சிகை அலங்காரம் ஸ்டைலிஸ்ட் சாஹாஸ் என்பவரையும், இதனையடுத்து தனக்கு மேக்கப் போடும் கஜோல் என்பவரையும், அடுத்ததாக தனக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் சாந்தி என்பவரையும், இறுதியாக தனது உதவியாளர் ராம் என்பவரையும், அறிமுகம் செய்தார். இதுகுறித்த வீடியோவில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் குறித்து பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் திரைப்படம் குறித்து பூஜா ஹெக்டே கூறியதாவது, "எனக்கு தெரிந்தவரையில் ஷூட்டிங் மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது, அடுத்த ஷெட்யூளுக்காக சென்னை வருவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இதற்கு மேல் நான் எந்த அளவுக்கு அதை பற்றி பேசலாம் என்று தெரியவில்லை, இதை நீங்கள் கேட்பதற்கு சரியானவர்கள் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் சன் பிக்சர்ஸ்தான், அவர்களுக்குத்தான் போஸ்டர், படத்தின் ப்ரோமோஷன் போன்றவைகளை எப்படி செய்யவேண்டும் என்ற ஐடியா இருக்கும்." என்றார்.
பின் ரசிகர்கள் தளபதியோடு நடனம் ஆடினீர்களா என்று கேட்ட போது, அதில் சர்ப்ரைஸ் உள்ளதாகவும் கூறிய அவர் "பள்ளி கல்லூரிகளில் ஸ்டேஜில் நடனமாடும்போதே ஸ்டெப்களை மறந்து அப்படியே நின்றுவிடுவேன். 4 நான்கு நிமிடங்கள் பாடல் முடியும் வரை அப்படியே நின்றிருக்கிறேன். ஆனால் அது போன்ற தோல்விகள்தான் என்னை மேலும் மேலும் முயற்சி செய்ய தூண்டியது" என்று ஒரு சிறு மோடிவேஷனல் கிளாஸும் எடுத்தார்.
தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படம் மட்டுமின்றி பிரபாஸ் நடித்து வரும் ’ராதே ஷ்யாம்’ சல்மான்கான் நடித்து வரும் ’பஜன்’ ரன்வீர் சிங் நடித்து வரும் ’சர்க்கஸ்’ சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சார்யா’ மற்றும் மோஸ்ட் காஸ்ட்லி பேச்சிலர் ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், செல்வராகவன் வில்லனாக நடிக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையில், மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய உருவாகிக்கொண்டிருக்கிறது.