மேலும் அறிய

Actor Vijay: 'ஒரே ’விக்’ மட்டும் பயன்படுத்துங்க விஜய்’.. வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்.. கண்டுகொள்ளாத தளபதி..!

நடிகர் விஜய் குறித்து பயில்வான் ரங்கராஜன் பேசிய பேச்சு ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அவர் மீது சமூக வலைத்தளங்களில் கண்டத்தை பதிவிட்டு வருகின்றன. 

சமீபமாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனின் பரபரப்பான கருத்துக்களால் கோலிவுட் வட்டாரம் திகிலாகி வருகிறது. பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக ஏதாவது ஒரு நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். தற்போது பெரிதாக எந்த படத்திலும் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பல்வேறு சினிமா தொடர்பான யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒரு சினிமா நட்சத்திரம் குறித்து கிசு கிசு அல்லது ஏதாவது ஒரு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். 

மேலும், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒருவழியாக்குவார். கடைசியாக சாந்தனு நடித்த ’இராணவ கோட்டம்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பாக்யராஜ் குறித்த கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். 80 கால கட்டத்தில் இருந்து நடித்து வருவதால், தனக்கு இருக்கும் பழக்கத்தின் மூலம் சினிமா பிரபலங்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். அது ஒரு சிலது உண்மைகளாகவும், வதந்தியாகவும் இருக்கும். 

இந்தநிலையில், நடிகர் விஜய் குறித்து பயில்வான் ரங்கராஜன் பேசிய பேச்சு ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அவர் மீது சமூக வலைத்தளங்களில் கண்டத்தை பதிவிட்டு வருகின்றன. 

அப்படி என்ன சொன்னார் பயில்வான் ரங்கராஜன்..? 

நடிகர் விஜய் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் விக் வைத்து நடித்து வருகிறார். விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இன்றளவும் தலையில் முடி உள்ளது. ஆனால், விஜய்க்கு தலையில் முடி உதிர்ந்துவிட்டது. அதற்கு காரணம் கெமிக்கல் கலந்த ஷாம்பூகளை பயன்படுத்தியதால்தான். ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷாம்பூ பயன்படுத்தியதால்தான் தனக்கு முடி கொட்டியதாக சொல்லியிருக்கிறார். 

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் ஒரு காலத்தில் முடி கொட்டியது. இதை அறிந்துகொண்ட அவர் வெளிநாடுக்கு சென்று சிகிச்சை பெற்று தலைமுடி பிரச்சனையை சரிசெய்து கொண்டார். ஆனால், ரஜினிகாந்த் தன் தலைமுடியை பற்றி கவலைபடாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் விஜய் விக் வைத்து கொண்டார். 

விக் வைப்பது ஒன்றும் தவறு இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விக் வைப்பதுதான் தவறு. ஒரே விக்கை வைத்து பழகுங்கள். பனையூரில் தனது ரசிகர்களை சந்தித்தபோது கூட பெரிய விக் முடியை மாட்டியிருக்கிறார்.” என தெரிவித்தார். 

நீண்ட காலமாகவே நடிகர் விஜய் தனது படங்களில் விக் வைத்து நடித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் ’தெறி’ படத்தின்போது  ஹேர் டிரான்ஸ்பர் செய்து கொண்டது உண்மைதான். ஆனால், அதற்கு பிறகு இவர் விக் எதுவும் பயன்படுத்தவில்லை. ஒரிஜினல் முடியுடன் தான் இருக்கிறார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியது. 

 

தலைப்பு செய்திகள்

134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget