Watch Video: ‛பிரம்மாஸ்திரம் கதையை 2016ல் கேட்டேன்...’ அஸ்ட்ராவெர்ஸ் மிரட்டும் என்கிறார் ராஜமெளலி!
இயக்குநர் ராஜமெளலி பிரம்மஸ்திரா என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
இயக்குநர் ராஜமெளலி பிரம்மஸ்திரா என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், 2016 யில் அயன் முகர்ஜி பிரம்மஸ்திரா கதையை சொன்னார். எனக்கு கதை ரொம்ப பிடித்துவிட்டது. அத்தோடு இதில் விஷ்வல் எஃபெக்ட்ஸூக்கான ஸ்கோப் அதிகமாக இருப்பதாக தெரிந்தது. மெட்டாவெர்ஸ், மல்டி வெர்ஸ் கேள்விபட்டிருப்பீர்கள் ஆனால் இந்தப்படத்தில் நாம் பார்க்க இருப்பது அஸ்ட்ராவெர்ஸ்.
அப்படி என்றால் என்னவென்றால், நாம் சாஸ்திரங்களின் படி நாம் எல்லாரும் வாழ்வதற்கு தேவையானது ஐம்பூதங்கள். இந்த ஐம்பூதங்களை அடக்கி ஆளும் சக்தியே பிரம்ம சக்தி. பிரம்ம சக்தியில் இருந்து வந்த ஆயுதங்களைப்பற்றிய வீரர்களைப்பற்றிய கதையே பிரம்மஸ்திரா. இந்த அஸ்திரங்களுடைய உலகம், அதில் வரும் சூப்பர்ஹீரோக்களின் இடையே நடக்க கூடிய முரண்பாடுகளை விஷ்வல் ட்ரீட்டாக காண்பித்திருக்கிறார் அயன். இதில் எனக்கு பிடித்த விஷயம் மற்ற எல்லா சக்திகளையும் விட, காதலே பெரிய சக்தி என அயன் காண்பித்து இருக்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று பேசியிருக்கிறார்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு பிரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
View this post on Instagram
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற பிரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூன், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தை நான்கு மொழிகளிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார்.