மேலும் அறிய

Ayothi: பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய சசிகுமாரின் அயோத்தி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து ஹிட் அடித்த அயோத்தி திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் படம் எனக் கொண்டாடப்பட்ட ‘அயோத்தி’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சைலண்ட் ஹிட் அடித்து பெரும் பாராட்டுக்களைக் குவித்த திரைப்படம்  ‘அயோத்தி’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீடு வழங்கப்பட்டு விமர்சனரீதியாக பாராட்டுகளை அள்ளியது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, ​​தேசபக்தர் பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது. மீதிக் கதையானது, இரண்டு குழந்தைகள் தங்கள் அதீத மதவெறி பிடித்த  தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான  இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.

மதம், மூடநம்பிக்கைகள், ஆண்மைய மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாக பேசிய அயோத்தி திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் NT ரகுநந்தனின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்தது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மிக அழகாகப் படம்பிடித்திருந்தது.
  
இந்நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து ஹிட் அடித்த அயோத்தி திரைப்படம், ஏப்ரல் 7ஆம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மனிஷா கல்ரா படம் குறித்து கூறுகையில், “ZEE5 தளத்தில் எங்கள் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தரமான பொழுதுபோக்கை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் எங்களின் தமிழ் வெளியீடுகள் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெவ்வேறு ஜானர்கள், புதுப்புது திறமைகள், உயர்தரத்திலான தயாரிப்பு மற்றும் தெளிவான வடிவங்கள் கொண்ட கதைகளை நாங்கள் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துகிறோம். அந்த வகையில் எங்களின் அடுத்த வெளியீடாக அயோத்தி படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பது மகிழ்ச்சி. மதங்களை தாண்டிய மனிதநேயத்தை போற்றும் இக்கதை ஒற்றுமையையும் அன்பையும் பேசுகிறது.எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் அதே வேளையில் அவர்களை ஒன்றாக இணைக்கும் மேலும் இதுபோன்ற கதைகளை வழங்க நாங்கள் ஆவலாக உள்ளோம்” என்றார்.

நடிகர் எம்.சசிகுமார் கூறுகையில், “மனித நேயம் பேசும் ஒரு அழகான காவியமான "அயோத்தி" படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். இப்படம் மனித உணர்வுகளின் சரியான கலவையைக் கொண்டுள்ளதோடு 'வாழ்க்கை' என்ற இந்தப் பயணத்தில் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். திரையரங்கில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், இன்னும் பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 190+ நாடுகளில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ZEE5 தளத்தில்  இப்படம் வெளியிடப்படுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.  அயோத்தி படம் மூலம் ரசிகர்கள் ஒரு அழகான அனுபவத்தைப் பெறுவார்கள்” எனப் பேசியுளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சிPremalatha vijayakanth | ”STRONG ROOM மட்டும் போதுமா?தேர்தல் ஆணையம் STRONG-ஆ இருக்கனும்” - பிரேமலதாGukesh meets Stalin | தம்பி குகேஷ்.. வா பா.. சாதித்த இளைஞர் நேரில் வாழ்த்திய முதல்வர்Premalatha Vijayakanth |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?
அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?
Embed widget