மேலும் அறிய
Captain Miller Trailer : வருகிறார் கேப்டன் மில்லர்.. ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது
![Captain Miller Trailer : வருகிறார் கேப்டன் மில்லர்.. ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.. dhanush captain miller trailer to release 6th january Captain Miller Trailer : வருகிறார் கேப்டன் மில்லர்.. ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/0838ff31912c53e6aabaeb4ff56a80e81704460179992572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேப்டன் மில்லர் . (Image source: Twitter)
கேப்டன் மில்லர்
தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளத் திரைப்படம் கேப்டன் மில்லர். சந்தீப் கிஷன் , ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் நாளை 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Captain Miller trailer 06/01/24 pic.twitter.com/f98vHz6WhM
— Dhanush (@dhanushkraja) January 5, 2024
கேபடன் மில்லர் படம் குறித்து தனுஷ்
கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் தனுஷ், “சிறுக சிறுக சேர்த்த சிறு துளி (ரசிகர்கள்), பெருவெள்ளமாக இன்னைக்கு என் முன்னாடி இருக்கீங்க. இது நான் சேர்த்த சொத்து. இது அனைத்துக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இந்த படம் பற்றி யோசித்தால் உழைப்பு மட்டும் தான் நியாபகம் வரும். அப்படிப்பட்ட அசுர தனமான உழைப்பு இதில் இருக்கும்.
அர்பணிப்பு மற்றும் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் கேப்டம் மில்லர். இந்தப் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஒரு டெவில் மாதிரிதான் . அசுரத்தனமான உழைப்புக்கு சொந்தக்காரர் அவர். ஆனால் அருண் மாதேஸ்வரனை பார்க்கும்போது எனக்கு வெற்றி மாறன் நியாபகம் தான் வருகிறது. கேப்டன் மில்லர் படத்தின் கதை சொல்லும் போது பெரிய அளவில் நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பேசவில்லை. ஆனால் படம் பார்த்துவிட்டேன். இப்போ தான் அருண் ஏன் பெரிய அளவில் பேசவில்லை என புரிகிறது. இந்த படம் பண்ணும் போது நான் ராக்கி படம் பார்க்கவில்லை. ஆனால் அருண் மாதேஸ்வரன் சம்பவம் பண்ற கைன்னு புரிஞ்சிது. நல்லவேளை நான் அவரை முந்திக்கொண்டு பிடித்து விட்டேன். விரைவில் அவருடன் ஒரு படத்தில் இணையவுள்ளேன்” எனவும் தனுஷ் தெரிவித்துள்ளார். ”
பொங்கல் வெளியீடு
2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது கேப்டன் மில்லர் படத்தைத் தவிர்த்து சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இது தவிர்த்து அருண் விஜய் நடித்து ஏ.எல் விஜய் இயக்கத்தில் மிஷன் திரைப்படமும் ஜனவர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ,விக்ராந்த் , மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் படமும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : 50 Days Of Jigarthanda Double X : வெற்றிகரமான 50-வது கொண்டாடும் ஜிகர்தண்டா படக்குழு.. படையெடுக்கும் ரசிகர்கள்..
Vijayakanth: ”பல நாள் விஜயகாந்த் போட்ட சாப்பாடுதான் பசியை போக்கியது” - நடிகர் சென்ராயன் உருக்கம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion