மேலும் அறிய

CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்

CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சாதனைகளை பட்டியலிடும் முழு நேர வேலையை கைவிட்டு, சட்ட ஒழுங்கை காப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • சென்னை அரைநூற்றாண்டு வளர்ச்சியை ஐந்தாண்டில் சாதித்துள்ளதாக முதல்வர் பெருமிதம்.
  • பாலங்கள், பூங்காக்கள், மழைநீர் வடிகால்கள், பள்ளிகள், சாலைகள் மேம்பாடு.
  • தென் மாவட்டங்களையும் அரசு கவனிக்க வேண்டுமென நெட்டிசன்கள் வலியுறுத்தல்.
  • பெண்கள் மீதான குற்றங்கள், காவல் மரணங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

CM Stalin: சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ள திராவிட மாடல் ஆட்சி

  • பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17)
  • பூங்காக்கள் மேம்பாடு – 236 பணிகள்
  • மழைநீர் வடிகால்கள் – 1,442 கிலோமீட்டர்
  • பள்ளிகள் மேம்பாடு – ரூ. 533 கோடி
  • குடிநீர்த் திட்டப் பயன்பாடுகள் – ரூ. 5,447 கோடி
  • சாலைகள் மேம்பாடு – 3,455 கிலோமீட்டர்
  • வடசென்னை வளர்ச்சித் திட்டம் - சுமார் 7,000 கோடி ரூபாய்

இவை தவிர, பல்வேறு முதல்வர் படைப்பகங்கள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டுத் திடல்கள், நவீன வசதிகளுடன் கூடிய திருமண மாளிகைகள், புத்தம்புதிய வடிவமைப்பிலான பேருந்து நிலையங்கள், தாழ்தள மின் பேருந்துகள் எனச் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது. இன்னும் செய்வோம், உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-இல் வளர்த்தெடுப்போம்” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் ஆவேசம்:

முதலமைச்சரின் இந்த பதிவின் கீழ் எதிர்க்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் பலரும், மிகவும் ஆவேசமாக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அவற்றில், தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னை மட்டுமே தமிழ்நாடு இல்லை” என குறிப்பிட்டுள்ளனர். இதுபோக சாதனைகள் என விளம்பரங்கள் குறித்து மட்டுமே வாய் திறந்து பேசும் முதலமைச்சர், பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அஜித்குமார் எனும் இளைஞர் காவலர்களால் அடித்து கொல்லப்பட்டபோது மன்னிப்பு கேட்ட ஸ்டாலின், ஆகாஷ் எனும் மற்றொரு இளைஞர் அடித்து கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக வாய் திறக்காதது ஏன்? 2 வயது பிஞ்சு குழந்தை தொடங்கி 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து எப்போது பேசுவார்? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதெல்லாம் முதலமைச்சரின் கண்களுக்கு புலப்படவில்லையா? எனவும் சாடி வருகின்றனர்.

லிஸ்டில் இதையும் சேத்துக்கோங்க..!

திமுகவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாக சிலவற்றை குறிப்பிட்ட முதலமைச்சரே, கடந்த இரண்டு வாரங்களில் நடந்த குற்றச்சம்பவங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? என பெரும் பட்டியலையும் அதிமுகவினர் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, 

  • 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி: பிப்ரவரி 27, 2026.
  • விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய திமுக கவுன்சிலர்: பிப்ரவரி 25, 2026.
  • நாங்குநேரி அரிவாள் வெட்டு சம்பவம்: மார்ச் 2, 2026.
  • சிவகங்கை இடைக்காட்டூரில் பட்டியலின கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் - மார்ச் 5
  • மானாமதுரை சீயோனில் அரிவாள் வெட்டு சம்பவம்: மார்ச் 6, 2026
  • நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை: மார்ச் 7, 2026.
  • மானாமதுரை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல் மரணம்: மார்ச் 8, 2026 (மரண தேதி; சம்பவம் மார்ச் 6).
  • கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை: மார்ச் 8-9, 2026.
  • சென்னை திரிசூலத்தில் இரட்டைக்கொலை: மார்ச் 8, 2026.
  • மது போதையில் இருந்த போதை ஆசாமிகளால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி - 10-03-26
  • கோவை அரசுப்பள்ளியில் மதிய உணவில் பல்லி - 43 மாணவர்களுக்கு சிகிச்சை - 10/03/26
  • விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 11-3-26

விளம்பரங்களிலும், தற்பெருமை பேசுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டு, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை எப்படி செயல்படுகிறது, மாநிலத்தின் சட்ட-ஒழுங்கின் நிலை என்ன என்பதையும் கண்களை திறந்து பாருங்கள் முதலமைச்சரே எனவும் எதிர்க்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

Frequently Asked Questions

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

சென்னையில் 5 ஆண்டுகளில் 36 பாலங்கள், 236 பூங்காக்கள் மேம்பாடு, 1442 கி.மீ மழைநீர் வடிகால்கள், பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ. 533 கோடி, குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 5,447 கோடி, சாலை மேம்பாட்டிற்கு 3,455 கி.மீ என பல வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் சென்னை வளர்ச்சிப் பதிவிற்கு நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் என்ன கருத்துக்களை தெரிவித்துள்ளனர்?

தென் மாவட்டங்களையும் கவனிக்க வேண்டும் என்றும், சென்னை மட்டுமே தமிழ்நாடு இல்லை என்றும் கருத்துக்கள் வந்துள்ளன. பெண்களுக்கெதிரான குற்ற சம்பவங்கள் மற்றும் இளைஞர் மரணங்கள் குறித்து முதலமைச்சர் பேசாதது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சமீபத்திய குற்ற சம்பவங்கள் குறித்து அதிமுகவினர் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்?

கடந்த இரண்டு வாரங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், தாக்குதல்கள் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களின் பட்டியலை அதிமுகவினர் வெளியிட்டு, முதலமைச்சர் இவற்றை கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

2030-இல் சென்னையை எப்படி வளர்த்தெடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்?

2030-இல் உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக வளர்த்தெடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heatwave: இப்பவே இப்படினா மே மாசம் என்னாகும்? தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில் - தவித்த வேலூர் மக்கள்
இப்பவே இப்படினா மே மாசம் என்னாகும்? தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில் - தவித்த வேலூர் மக்கள்
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
CSK vs KKR: சென்னை - கொல்கத்தா மேட்ச் பார்க்க போறீங்களா? - மெட்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
CSK vs KKR: சென்னை - கொல்கத்தா மேட்ச் பார்க்க போறீங்களா? - மெட்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Embed widget