Ayalaan Director: 'தமிழ் மீடியம்.. நிறைய வாசிப்பு.. குட்டி பட்ஜெட்ல அறிவியல் கதை' இயக்குநரை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!
“ரவிக்குமார் தமிழ் மீடியத்தில் படித்தவர், காலேஜ் போய் படித்ததில்லை, கரஸ்பாண்டன்சில் தான் படித்திருக்கிறார். ஆனால் நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்” என சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள திரைப்படம் அயலான். 2018ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு பல தடங்கல்களுக்குப் பிறகு அயலான் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயலான் டீசருக்கு வரவேற்பு:
இதனிடையே நேற்று சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றைய அயலான் டீசர் வெளியீட்டு விழா சிவகார்த்திகேயன் பேசியதாவது:
"தீபாவளிக்கு படம் ரிலீஸ் என சொல்லப்பட்ட நிலையில் சிஜியில் இன்னும் சில விஷயங்கள் சேர்க்க வேண்டும் எனவே இன்னும் கொஞ்சம் டைம் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கேட்டார்கள். நீங்கள் டீசரில் பார்க்கும் ஏலியன் உலகம் சமீபத்தில் சிஜியில் உருவாக்கப்பட்டது. படம் இன்னும் விஷூவல் ஸ்பெக்டக்கிளாக இருக்க வேண்டும் என நினைத்தோம்.
நேற்று இன்று நாளை பார்த்து மிரண்டேன்:
இன்று நேற்று நாளை படம் வந்தப்போ டைம் மெஷின் பற்றிய குட்டி குட்டி ப்ரோமோக்கள் பார்த்து விட்டு விஷ்ணு விஷால் சாருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதன் பின் திருச்சியில் தியேட்டரில் படம் பார்த்து மிரண்டு விட்டேன். அதன் பின் விஷ்ணு விஷாலிடம் அவரது நம்பரை வாங்கி பேசினேன். எனக்கு படக்கதை சொல்லுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்னாகவே நான் அவருடன் படம் பண்ணுவது என்று முடிவு செய்துவிட்டேன்.
தயாரிப்பாளர் கொடுத்த சிறிய பட்ஜெட்டில் சிறப்பான தரத்தில் அவர் இன்று நேற்று நாளை போன்ற ஒரு படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படத்தையும் அவர் மீதுள்ள நம்பிக்கையால் தான் தொடங்கினோம். ரவிக்குமார் தமிழ் மீடியத்தில் படித்தவர், காலேஜ் போய் படித்ததில்லை, கரஸ்பாண்டன்சில் தான் படித்திருக்கிறார். ஆனால் நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.
ரவிக்குமார் புரிய வைத்துவிட்டார்:
இந்த தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் எல்லாம் ஸ்கூல் வியாபாரத்துக்காக உருவாக்கப்பட்டது. அதற்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என ரவிக்குமார் புரியவைத்துள்ளார். இப்படி ஒரு கதையை யோசித்துவிட்டு அதற்கு ஏகப்பட்ட ரெஃபரன்ஸ் காண்பிப்பார். இந்தப் படம் 2டி அனிமேஷனில் எங்களிடம் 80 சதவீதம் உள்ளது. அது அனைத்தையுமே அவர் ரெடி செய்து வைத்துவிட்டார், இன்னும் சொல்லப்போனால், என்னை மேலும் ஆச்சர்யப்படுத்துவது, இந்த மொத்தம் படத்தையும் ரவிக்குமார் 95 நாள்கள் மட்டும் தான். நீங்க டீசரில் பார்த்தது கொஞ்சம் தான்.
இது மாதிரி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. ஏனா அவ்வளவு ப்ரிப்பரேஷன். ஒரு ஐபேடில் படத்தின் ப்ரிவைஸ் வைத்துக் கொண்டு எடுப்பார். ஆனால் பலரும் அவர் ஏதோ ஒரு ஐபேட் வச்சிட்டு பாத்து பாத்து எடுக்கறாருனு சொன்னாங்க. இப்படி ஒரு படம் பண்றோம்னா இதுக்கு ரஹ்மான் சார் ம்யூசிக் இருக்கணும்னு எனக்கு தோணுச்சு” எனப் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்