AR Rahman: ‘அட..இது லிஸ்ட்ல இல்லையே’...ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த கிரியேட்டிவிட்டி.. வைரலாகும் வீடியோ..
தான் இசையமைத்த பாடலை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட இணையவாசிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தான் இசையமைத்த பாடலை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட இணையவாசிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் நடிப்பில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் என பலரும் நடித்திருந்தனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கிய நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த பத்து தல படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி முதலில் டிசம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னரே மார்ச் 30 ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Omg 🤩❤😅 @arrahman sir recreated this !!! pic.twitter.com/CDY15NBjdX
— A.R.Rahman News (@ARRahman_News) June 21, 2023
இதில் இடம் பெற்ற ராவடி பாடலுக்கு நடிகை சாயிஷா நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். குழந்தைப் பிறப்புக்கு பின்னால் அவர் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறையாகும். வேகமாக நகரும் பாட்டுக்கு ஏற்ப நடன அசைவுகளை வெளிப்படுத்தி பாராட்டும் பெற்றிருந்தார். அந்த பாடலை பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவிட்டனர்.
அந்த வகையில் இணையத்தில் மிகவும் பிரபலமான இணையவாசிகள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ ட்ரெண்டாக இதைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் பாடகி சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் ட்ரோல் வீடியோ மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இயக்குநர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.