Netrikann | நெற்றிக்கண் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகை? பேச்சுவார்த்தை தீவிரம்..!
லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம், தொய்வான திரைக்கதை என படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்துக்கு பின்னர் நெற்றிக்கண் படம் மூலம் மீண்டும் நயன்தாரா ஓடிடி பக்கம் சென்றுள்ளார். 'ப்ளைண்ட்' என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளியாகியுள்ள இப்படத்தினை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இத்திரைப்படம் ரிலீசான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நயன்தாரா மீண்டும் ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம், தொய்வான திரைக்கதை என படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா கேரக்டரில் தெலுங்கில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அனுஷ்கா அதிகாரப்பூர்வமாக படத்துக்கு கமிட் ஆகவில்லை என்றும், இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
த்ரில்லர் வகை என்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே பெற்றுள்ளன. சூப்பர் டூப்பர் ஹிட் என்றாலும் பரவாயில்லை, கலவையான விமர்சனங்கள் பெற்ற ஒரு படத்துக்கு கமிட் ஆவாரா அனுஷ்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் நெற்றிக்கண் உரிமையை பெற்று இருப்பதாகவும், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் கங்கை அமரன் ! - இயக்குநர் ஹரி படத்தில் ரி- எண்ட்ரீ!
அனுஷ்கா சில வருடங்களாக திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியே உள்ளார். அனுஷ்கா நடித்து கடைசியாக சைலன்ஸ் என்ற திரைப்படமே வெளியானது. அதற்கு பின் அவர் வேறு படங்களில் முகம் காட்டவில்லை. இந்நிலையில் ஒரு இடைவெளி விட்டு வரும் அனுஷ்கா ரீமேக் மூலம் களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னதாக, நெற்றிக்கண் திரைப்படம் தியேட்டர் ரிலீஸ் என்றால் சிறப்பாக இருந்திருக்கும் என்ற கருத்தும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் கொரோனாவால் இப்படம் ஓடிடி பக்கம் ஒதுங்கியது. இந்த நிலையில் படம் வெளியாகி 15 நிமிடங்களிலேயே நெற்றிக்கண் இணையத்தில் கசிந்தது. குறிப்பாக டெலிகிராமில் லிங்க்குகள் பறந்தன. தியேட்டரில் இல்லாமல் ஓடிடி ரிலீஸ் என்றாலும், இந்த பைரசிக்கு இல்லையா ஒரு முடிவு என வருத்தத்தை பதிவு செய்துள்ளனர் திரைத்துறையினர்.
Pirates of the Caribbean ஜேக் ஸ்பேரோவுக்கு ஃபேனா நீங்க? அவருக்கு இதுதான் வருத்தமாம்..