India Post Recruitment 2021: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது..அஞ்சல் துறையில் 2357 காலி பணியிடங்கள்.!
BPM/ ABPM/ Dak Sevaks ஆகிய பணிக்கு மொத்தமாக 2357 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல் துறையில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 2357 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளன
அதன்படி BPM/ ABPM/ Dak Sevaks ஆகிய பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விவரங்கள்:
BPM/ ABPM/ Dak Sevaks ஆகிய பணிக்கு மொத்தமாக 2357 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு அப்ளை செய்ய வயது வரம்பு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 19-ஆம் தேதி ஆகும். இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே.
விண்ணப்ப கட்டணத்தை பொருத்தவரை Gen/ OBCkக்கு ரூ. 100/- என்றும், SC/ST/Female/PwBDக்கு தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் BPM பணிக்கு ரூ.12 ஆயிரமும், ABPM/Dak Sevak ஆகிய பணிக்கு ரூ.10000 என்றும் சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு wbgdscyl3@gmail.com என்ற இமெயிலை தொடர்பு கொள்ளலாம். அல்லது 033-22120578 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
மேலதிக தகவலை பெற https://appost.in/gdsonline/home.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ளவர்கள் https://appost.in/gdsonline/home.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19 ஆகும்.
அப்ளை செய்வது எப்படி?
1. https://appost.in/gdsonline/ or https://indiapost.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்
2. Registration என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்
3.ஆதார் தகவல், தொலைபேசி எண், பிறந்த தேதி, பிரிவு மற்றும் மற்ற தகவலை பூர்த்தி செய்ய வேண்டும்.
4.அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்
5.விண்ணப்பித்தாரர்களின் பிரிவுகள் ஏற்ப பணம் செலுத்தவேண்டும்.
6. சப்மிட் கொடுத்து விண்ணப்ப பூர்த்தியை முடித்துக்கொள்ளலாம்
6. தேவை என்றால் தகவல்களை சரிபார்த்துவிட்டு விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்
4 நாட்கள் தான்.. செல்போன்களுக்கு அமேசான் கொடுக்கும் அசத்தல் ஆஃபர்கள்!