மேலும் அறிய

Animal Movie: தியேட்டருக்குள் பட்டாசு.. சல்மான் ரசிகர்கள் வரிசையில் அலப்பறை செய்த ரன்பீர் ரசிகர்கள்.. வலுக்கும் எதிர்ப்பு!

Animal Movie: அனிமல் படம் திரையிடப்பட்டபோது ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்த நிலையில், இணையவாசிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம்  திரையிடப்பட்டபோது, ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்த ரசிகர்கள்

முன்னதாக சல்மான் கானின் டைகர் 3 திரையிடப்பட்ட போதும் ரசிகர்கள் அங்கு பட்டாசு வெடித்த இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. மேலும் அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இது பற்றி சல்மான்கான் கூறியதாவது: “டைகர் 3 படத்தின் போது திரையரங்குகளுக்குள் பட்டாசு வெடிப்பதைப் பற்றி கேள்விப்படுகிறேன். இந்த நபர்களின் செயல்களை தான் அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. இது ஆபத்தானது. நம்மையும் மற்றவர்களையும் ஆபத்தில் வைக்காமல் படத்தை ரசிப்போம். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருந்தார்.

வீடியோவிற்கு இணையத்தில் எதிர்ப்பு 

இந்நிலையில், ரன்பீர் ரசிகர்கள் பட்டாசு வெடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இது குறித்து நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட்டில், "சல்மான் கான் ரசிகர்களின் லோ பட்ஜெட் வடிவம் தான் ரன்பீர் ரசிகர்கள்" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "ரன்பீர் கதாப்பாத்திரத்தின் பார்வையில் பார்த்தால் படம் நன்றாகக் கூட இல்லை. பின் எதை கொண்டாடுகின்றனர்” என்று விமர்சித்துள்ளார். 

அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது. அனிமல் படத்தில் ரன்பீர் லீட் ரோலில் நடித்துள்ளார். இருந்தபோதிலும் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் தான் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அனிமல் திரைப்பட கதை 

தன்னுடைய தந்தையின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் ஒரு மகன், அந்த தந்தையின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக எந்த எல்லைவரை செல்வான் என்பதே அனிமல் திரைப்படத்தின் கதை.  அப்படியான ஒரு மகனாக நடித்திருக்கிறார் ரன்பீர் கபூர். அவரது தந்தையாக அனில் கபூர் நடித்திருக்கிறார்.
சிறிய வயதில் இருந்தே  இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான தனது தந்தையின் அன்பிற்காக மட்டுமே ஏங்கும் விஜய் (ரன்பீர் கபூர் கதாப்பாத்திரம்) கோபமான ஒரு இளைஞனாக வளர்கிறார்.
அவரின் தந்தை அவரை எவ்வளவு காயப்படுத்தினாலும், அவரது உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்படும்போது அவரது எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்குகிறார். இப்படத்தில் கேங்ஸ்டர் வாடையும் அடிக்கின்றது. தன்னுடைய தந்தையின் மீது கிட்டதட்ட அன்புப் பைத்தியமாக இருக்கும் ஒருவனின் மனதை படம்பிடித்து காட்டுவதே அனிமல் படத்தின் முக்கியமான கதையாக உள்ளது. இப்படம் விமர்சனங்களைத் தாண்டி திரையரங்குகளில் வசூலைக் குவித்து வருகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget