Anikha Surendran: அஜித்தின் ரீல் பொண்ணு..இப்ப தெலுங்கு ஹீரோயின்..ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் அஜித்தின் ரீல் மகளாக கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
பிரபல நடிகை அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கவுள்ள தெலுங்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் ரீல் மகளாக கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் 3 வயதில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக உருவெடுத்தார். தொடர்ந்து மிருதன், நானும் ரௌடி தான், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் பார்ப்பதற்கு நயன்தாரா போன்று இருப்பதாக சொல்லி இவரை குட்டி நயன்தாரா என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
View this post on Instagram
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தான் ஹீரோயினாக நடிக்க ரெடி என சொல்லாமல் சொல்லி வந்தார். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ஆல்ஃபிரட் டி. சாமுவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள ஓ மை டார்லிங் என்ற மலையாளப் படத்தில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கில் புட்டபொம்மா என்ற படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும், அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
View this post on Instagram
தெலுங்கில் மிகப் பிரபலமான சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் அவர் நடிக்கவுள்ளதால் திரையுலக பிரபலங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.