Sweet Kaaram Coffee: நீண்ட தூர பயணம்.. மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள்.. ஸ்வீட் காரம் காஃபி ட்ரைலர் ரிலீஸ்..!
மூன்று தலைமுறையைச் சேர்ந்தப் பெண்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இணையத் தொடர் ஸ்வீட் காரம் காஃபி யின் டிரைலர் வெளியாகியிருக்கிறது
மாடர்ன் லவ் ஆந்தலாஜியைத் தொடர்ந்து அமேசான் பிரைம் வழங்கும் மற்றொரு இணையத் தொடரான ஸ்வீட் காரம் காஃபியின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
ஸ்வீட் காரம் காஃபி:
லட்சுமி பாலச்சந்திரன் , மதுபாலா மற்றும் சாந்தி ஆகிய மூவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் ஸ்வீட் காரம் காஃபி. பிஜாய் நம்பியார் , கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் ஸ்வாதி ரகுராமன் ஆகிய மூன்று இயக்குநர்கள் இணைந்து மொத்தம் எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடரை இயக்கியுள்ளார்கள். லயன் டூத் இந்தத் தொடரை தயாரித்துள்ளது. வரும் ஜூலை 6 ஆம் தேதி அமேசான் பிரைமில் ஸ்வீட் காரம் காஃபி வெளியாக இருக்கிறது.
கதை
பாட்டி , அம்மா, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையைச் சேர்ந்தப் பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் கடுப்பாகி யாருக்கும் தெரியாமல் ஒரு பயணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் மனிதர்கள், தங்களுக்கு இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் தொடர் ஸ்வீட் காரம் காஃபி. தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது இந்தத் தொடர்.
நடிகர்கள்
மொத்தம் மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரத்திக் நடித்துள்ளார்கள்
சாந்தி பாலச்சந்திரன்
மலையாள நடிகரான சாந்தி பாலச்சந்திரன் இந்தத் தொடரில் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முந்தையதாக ஜல்லிகட்டு தரங்கம், சதுரம் ஆகியப் படங்களில் நடித்துள்ளார்.
மது
மணிரத்னம் இயக்கிய ரோஜா, ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் ஆகியத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த மதுபாலா இந்தத் தொடரில் நடுவயதை உடைய திருமணமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார் மது.
லட்சுமி
ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் குறும்புக்கார பாட்டியாக நடித்த லட்சுமி மீண்டும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மூனே மூனு வார்த்தை.
இயக்குநர்கள்
மொத்தம் மூன்று இயக்குநர்கள் இந்த்த் தொடரை இயக்கியுள்ளார்கள்.
பிஜாய் நம்பியார்
டேவிட் , சோலோ ஆகியத் திரைப்படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார். தாராள பிரபு படத்தை இயக்கிய கிருஷ்ணா மாரிமுத்து, மற்றும் ஸ்வாதி ரகுராமன் ஆகிய மூவர் இணைந்து இந்தத் தொடரை இயக்கியுள்ளார்கள்.
ஏற்கனவே இந்த வகையானத் திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த மூன்று இயக்குநர்கள் இணைந்து ரசிகர்களுக்கு புதிதான அனுபவம் ஏதும் வழங்க இருக்கிறார்களா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.