Sivakarthikeyan : பிரின்ஸ் படம் ஓடல..நான் காலினு சொன்னாங்க..அஜித் சார் கொடுத்த வாழ்க்கை பாடம்..எஸ்.கே ஒப்பன் டாக்
அஜித் சாரிடம் பேசும்போது கிடைக்கும் வாழ்க்கை பாடம் வேறு ஒருத்தரிடம் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என அஜித் பற்றி சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூல் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. தொலைக்காட்சியில் இருந்து திரைத்துறைக்கு வந்த சிவகார்த்திகேயன் 12 ஆண்டுகளில் மிகப்பெரிய ஸ்டாராக மக்கள் மத்தியில் உருவாகியுள்ளார். மேலும் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பு. முன்னதாக அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்தை சந்தித்தது குறித்து எஸ்.கே பேசியிருந்தார். 'வெல்கம் டு த பிக் லீக்" என அஜித் தன்னிடம் சொன்னதாக அவர் தெரிவித்தார். தற்போது இந்த சந்திப்பு குறித்து கூடுதல் விவரங்களை எஸ்.கே பகிர்ந்துகொண்டுள்ளார்.
அஜித் சார் கொடுத்த வாழ்க்கைப்பாடம்
" அஜித் சாருடம் பேசும் போது கிடைக்கும் வாழ்க்கைப்பாடம் வேறு எந்த மனிதரிடம் பேசினாலும் கிடைக்காது. அவர்களுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும். அது எப்படி என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் சொல்லும் கருத்து ரொம்ப தெளிவாக பளிச்சென்று இருக்கும். அது நம் நம்பிக்கையை ஒரு படி மேலேற்றும். அஜித் என்னிடம் "வெல்கம் டூ த பிக் லீக்" என்று சொன்னபோது நான் நடித்திருந்த பிரின்ஸ் படம் ப்ளாப் ஆகியிருந்தது. ஆனாலும் ஒருத்தர் நம்மிடம் அப்படி சொல்லும்போது அன்று வீட்டிற்கு போகும் போது அப்போ இன்னும் கொஞ்சம் உழைப்பு போட்டால் நாம் மேலே வந்திரலாம் என்று நம்பிக்கை வரும். பிக் லீக் எல்லாம் நாம் கனிக்க முடியாது. ஒரு கதைக்கு நாம் 200 சதவீதம் உழைப்பு கூட போடலாம் ஆனால் மக்கள் மனசு வைத்தால் மட்டுமே நாம் பிக் லீக் வர முடியும். ஆனால் அஜித் அப்படி சொன்னதற்கு பின் இவர்கள் எல்லாரும் சொல்வது போல் ஒரு படம் ப்ளாம் ஆனால் நான் அவுட் எல்லாம் இல்லை. அஜித் சார் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தோன்றியது. அந்த மாதிரி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான நேரம் வரும்போது சொல்கிறேன்" என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
"No one will give life lessons like #Ajithkumar sir❣️. Prince was a flop, eventhough AK said "Welcome to the big league" with an explanation which I have said during #Amaran audio launch🫶💯. His words has boosted my confidence📈"
— AmuthaBharathi (@CinemaWithAB) November 20, 2024
- #Sivakarthikeyan pic.twitter.com/QHmc0EUgdd