மேலும் அறிய

Alia Bhatt : இவ்வளவு சின்ன வயசுல கர்ப்பமா? : ட்ரோல் செய்தவர்களுக்கு நெத்தியடி கொடுத்த ஆலியா பட்..

பாலிவுட் குயின் ஆலியா பட். மகேஷ் பட்டின் மகள், பூஜா பட்டின் தங்கை, ரன்பீர் கபூர் மனைவி இப்படி தனக்கு பிரமாண்ட அடையாளம் கொண்டவர்.

பாலிவுட் குயின் ஆலியா பட். மகேஷ் பட்டின் மகள், பூஜா பட்டின் தங்கை, ரன்பீர் கபூர் மனைவி இப்படி தனக்கு பிரமாண்ட அடையாளம் கொண்டவர்.

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் தான் ஆலியா நாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திற்குப் பின்னர் அவர் கல்லி பாய், டியர் ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். அண்மையில் ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை. இந்த நிலையில் தான், ஆலியா பட் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். ‘The Heart Of Stone' தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில் ஆலியா பட் கால் காடோட் உடன் நடிக்கிறார். படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது.

ஆலியா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாகவே இருவரும், தங்களின் உறவு குறித்து மேடைகளிலும் , நேர்காணல்களிலும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அவர்களின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. 

இந்நிலையில் அவர் தனது கர்ப்பத்தை அண்மையில் அறிவித்தார். அது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆலியா பட்.

அவர் பேசியிருப்பதாவது: நம் வாழ்வில் நடக்கும் பெரிய விஷயங்கள் நாம் தீர்மானித்து நடப்பதில்லை. அவை இயல்பாக நடந்துவிடுகின்றன. ஒரு பெண் என்ன செய்தாலும் தலைப்புச் செய்தியாகிறது. அவள் தாயாக நினைத்தாலும் அது செய்தி, அவள் யாருடனாவது டேட்டிங் செய்தாலும் செய்தி, கிரிக்கெட் மேட்ச் சென்றாலும் செய்தி இல்லை விடுமுறைக்கு சென்றாலும் செய்தி. ஏதோ காரணத்துக்காக எப்போதும் எல்லோரின் கண்களும் பெண்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை உற்று நோக்குகிறது. நான் இளமையாக இருக்கிறேன். அதனால் நான் என் வாழ்க்கையில் நடிப்பதைத் தவிர வேறேதும் செய்யக் கூடாதா? ஒரு குடும்பம் அமைத்துக் கொள்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் எப்படி எனது தொழில்முறை வாழ்வை மாற்றும். இவை இரண்டுமே இரு வெவ்வேறு துருவங்கள். ஆகையால் எனது கர்ப்பம் பற்றிய முட்டாள்தனங்களை நான் கண்டு கொள்ளப் போவதில்லை. நான் தொடர்ந்து சாதனைகள் செய்வேன் என்று கூறியுள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ள அவருடைய டார்லிங்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் ஆலியா இவ்வாறு பேசினார்.


Alia Bhatt : இவ்வளவு சின்ன வயசுல கர்ப்பமா? : ட்ரோல் செய்தவர்களுக்கு நெத்தியடி கொடுத்த ஆலியா பட்..


 
கணவருக்கு ஆதரவுக் குரல்:

விழாவில் தன்னைப் பற்றி மட்டும் ஆலியா பேசவில்லை. நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள கணவர் ரன்பீருக்காகவும் குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர். "ரன்வீர் சிங்கிற்கு அன்பை மட்டுமே வழங்குவோம். என் இனிய நண்பர் ரன்வீர் சிங் பற்றி யார் நெகட்டிவான கருத்துகள் சொன்னாலும் அதை நான் ஏற்கமாட்டேன்; ஏற்க முடியாது. அவரை எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன். ரன்வீர் அவரது திரைப்படங்களில் நமக்காக எவ்வளவோ தந்திருக்கிறார். நாம் அவருக்கு அன்பை மட்டுமே கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget