Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில், இந்த வாரம் கடந்த இரண்டு வாரங்களை போல் இருவர் வெளியேற்ற பட வாய்ப்புள்ளதை இன்றைய நிகழ்ச்சியில் உறுதி செய்துள்ளார் பிக்பாஸ்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆரம்பத்தில் 18 போட்டியாகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், அதன் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரி மூலமாக 6 போட்டியாளர்கள் என்று மொத்தமாக 24 போட்டியாளர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இடம் பெற்றனர். இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் என்று எலிமினேட் செய்யப்பட, இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அருண், தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சவுந்தர்யா, விஷால் என்று 8 போட்டியாளர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.
இதில் ஏற்கனவே ராயன் TTF டாஸ்கில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் போட்டியாளராக மாறிவிட்டார். இவரை தொடர்ந்து 2 வாரங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிப் போட்டியை எட்டி முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த வாரம், 2 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதை நேரடியாகவே பிக்பாஸ் இன்றைய டாஸ்க் மூலம் கூறி இருந்தார். பிக்பாஸ் நாக் அவுட் சுற்று மூலம் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பழைய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வர உள்ள நிலையில், அவர்களிடம் தற்போது உள்ளே உள்ள 8 போட்டியாளர்கள் யாரவது இருவர் தோற்கடிக்கப்படும் பச்சத்தில் இருவரை ரீபிளேஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை தவிர ஒருவர் அல்லது இருவர் இந்த வாரமும் மக்கள் ஓட்டுக்கள் மூலம் வெளியேற்றப்படலாம். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷிதாவிடம் இந்த பிக்பாஸ் சீஸனின் வெற்றியாளர் யார் என கேட்டபோது, கண்டிப்பாக முத்து தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறியுள்ளார். அக்ஷிதாவின் கணிப்பு பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.