Vidamuyarchi : விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா ? வராதா ? குழப்பத்தில் ரசிகர்கள்
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் விடாமுயற்சி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன், ரெஜினா , ஆரவ் உள்ளிட்ட நடிகர்களை வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேணி. இன்னொரு பக்கம் அனிருத் படத்திற்கு வைரல் ஹிட் பாடல் ஒன்றையும் பின்னணி இசையை வழங்கியுள்ளார். இப்படி படத்திற்கு எல்லாமே பாசிட்டிவாக அமைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சென்சார் போகவில்லை
விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இறுதிகட்ட போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்ற.படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இதுவரை படம் சென்சார் சான்றிதழுக்கு அனுப்பி வைக்கப்படாதது கேள்வி எழுந்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிறைய வாய்ப்பு இருப்பதாக வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
விடாமுயற்சி டிரைலர்
இன்னொரு பக்கம் விடாமுயற்சி படம் நிச்சயம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என மற்றொரு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். மேலும் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12.07 மணிக்கு விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் எந்த தகவலை நம்புவது என அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்
#AjithKumar #VidaaMuyarchi All set to release on 10th Jan 2025💯🎯✅
— CENIMA😍 UPDATE 😎 (@cenimakaran) December 30, 2024
Trailer expected to release on 1st January 2025 at 12:07AM 💯
Trailer Cuts already done✅ Please avoid Baseless Rumours 👍
2025 Pongal is Ours 💪