Valimai Update: விறுவிறுன்னு ஓடுமா 3 மணிநேரம்..வலிமை படத்தின் தணிக்கைக்குழு தகவல்கள்!
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. சரியாக 2 மணி 58 நிமிடம் 35 விநாடிகள் படம் ஓடும் நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பரபரவென திரைக்கதை இருந்தால் மட்டுமே 3 மணி நேரம் என்பது பார்வையாளர்களுக்கு உறுத்தலை தராது என்றும், ஏதேனும் சிறு சொதப்பால் என்றாலும் படத்தின் நீளம் தொய்வை கொடுத்துவிடும் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
The action-packed trailer of #Valimai has crossed 8 Million real-time views on YouTube. 💥https://t.co/OgggOTWPCH pic.twitter.com/NPdWZBqCdd
— Zee Studios (@ZeeStudios_) December 30, 2021
அஜித் குமார் நடிப்பில், ஹச்.வினோத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. வலிமை படத்திற்கான ஹைப் எந்த அளவு இருந்தது , இருக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது. இந்த சூழலில் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.
அப்டேட்.. அப்டேட் என காத்துக்கிடந்த ரசிகர்கள், எப்போதாம்பா ட்ரைலர் வெளியிடுவீங்க என காத்திருந்தனர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழு ட்ரைலர் வெளியீட்டு தேதியினை நேற்று காலை அறிவித்தது. சோனி மியூஸிக் சவுத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உங்களது ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்க்ரீனுடன் தயாராக இ்ருங்கள் ..பெருங்கோபம் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது “ என வலிமை படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டது
— Suresh Chandra (@SureshChandraa) December 31, 2021
Valimai Trailer: க்ளாஸ்.. மாஸ்.. ரேஸ்.. அல்டிமேட் ஸ்டைல்.. 8 மில்லியன்களை கடந்த வலிமை ட்ரெய்லர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்