VALIMAI UPDATE | VIRAL VIDEO| கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் !
சமூக வலைத்தள பக்கங்களில் யார் என்ன பதிவிட்டாலும் , அங்கு சென்று கமெண்ட்டில் “வலிமை அப்டேட் கொடுங்க ”என தீவிரமாக கேட்க தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள்
![VALIMAI UPDATE | VIRAL VIDEO| கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் ! ajith fans went extreme to know about valimai update viral video VALIMAI UPDATE | VIRAL VIDEO| கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/05/53ad2b9a5922278dc17181390a6843ea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத் . இவரது இயக்கத்தில் அஜித்குமார் இயக்கத்தில் வெளியான பிங் படத்தின் ரீமேக்தான் நேர்க்கொண்ட பார்வை . இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அஜித் நடிப்பில் “வலிமை “ படத்தை உருவாக்கி வருகிறார் ஹெச்.வினோத். கொரோனா சூழல் காரணமாக குறித்த நேரத்தில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் ஏங்கிக்கிடந்த அஜித் ரசிகர்கள் முதலில் படக்குழுவினரின் சமூக வலைத்தள பக்கங்களுக்கு சென்று வலிமை அப்டேட் சொல்லுங்க , என கேட்க ஆரமித்தனர். ஆனால் படக்குழு செவி சாய்த்ததாக தெரியவில்லை. அதன் பிறகு சமூக வலைத்தள பக்கங்களில் யார் என்ன பதிவிட்டாலும் , அங்கு சென்று கமெண்ட் பக்கத்தில் “வலிமை அப்டேட் கொடுங்க ”என தீவிரமாக கேட்க தொடங்கிவிட்டனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. கோயிலுக்கு சென்ற அஜீத் ரசிகர்கள் சிலர், பூசாரியிடம் ”ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்கய்யா” என ஏக்கத்துடன் கேட்கின்றனர். என்னவெற்று புரியாத பூசாரி மீண்டும் என்ன என சைகையில் கேட்க , “ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்கய்யா” என்கிறார்கள் .அருள்வாக்கு வாக்கு சொல்ல வந்த பூசாரி என்ன சொல்வதென்று தெரியாத குழப்பத்தில் விபூதி அடித்து அனுப்பிவிட்டார். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
அநியாயம் பண்றானுங்க நம்ம பசங்க🤣🤣😅😆 வலிமை அப்டேட்#ValimaiUpdate #AjithKumar pic.twitter.com/taSTaA4n22
— குமரி🚩தீனா தினேஷ்🔥⚡ (@dheenadinesh_77) July 4, 2021
பிரபலங்கள் யாரேனும் லைவ் வந்தாலும் கூட அவர்களிடம் வலிமை அப்டேட் கேட்பதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களின் அன்பு தொல்லை தாங்காத இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டார். அதில் வலிமை படத்தில் அம்மா பாசம் அடங்கிய உள்ள பாடல்கள் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆக உள்ள நிலையில், படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடப்படவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளனர். விரைவில் படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். வலிமை அப்டேட்டை வெளியிடாமலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் அஜித் தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தையும் ஹைச்.வினோத்திடமே கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி உருவாகும் அடுத்த பட அப்டேட்டையாவது உடனுக்கு உடன் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)