‛ஃபில்டர் ஒன்னும் போடாமலே... உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது...’ கத்தி வரியை கச்சிதமாக பிடித்த ஐஸ்வர்யா!
Aishwarya Rajinikanth : ‛எதுவாக இருந்தாலும் புன்னகையுடன் இருங்கள்’ என்றும், அந்த பதிவில் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் உடனான 18 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, அதன் பின் யோகா, தியானம், இயக்கம் என தனக்கான பாதையை தேர்வு செய்து , அதில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். சமீபமாக சினிமா இயக்கத்தில் தீவிரமாக இருந்த ஐஸ்வர்யா, அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று சற்று நேரத்திற்கு முன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். காலை உடற்பயிற்சி முடிந்த பின், அவர் சந்தித்த அனுபத்தை அவர் பகிர்ந்துள்ளார். பளிச்சிடும் தோற்றத்தில், எந்த அலங்காரமும் இல்லாமல், அதே நேரத்தில் வியர்வையில் கழுவப்பட்ட முகத்துடன் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா, ‛உடற்பயிற்சிக்குப் பின் தான் பளபளப்பாக’ இருப்பதாகவும், ‛இப்போது எந்த ஃபில்டரும் போடாமல் தான் பளபளப்பாக தெரிவதாக’ கூறியுள்ள அவர், வாரத்தின் நடுவில் இதை தெரிவிப்பதாகவும், ‛எதுவாக இருந்தாலும் புன்னகையுடன் இருங்கள்’ என்றும், அந்த பதிவில் கூறியுள்ளார்.
View this post on Instagram
கத்தி படத்தில் வரும் ‛செல்ஃபி புள்ள...’ பாடலில் வரும் ‛
‛போட்டோஷாப் பண்ணாமலே
பில்டர் ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது
நெஞ்சம் அள்ளுது...’
என்கிற வரி வரும். அந்த வரியை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக ஐஸ்வர்யாவின் இந்த பதிவு இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர். பாடல் வரி தொடங்குவது என்னவோ ‛செல்ஃபி புள்ள...’ என்று தான், ஐஸ்வர்யாவும் தனது போட்டோவை செல்ஃபியாகவே பதிவிட்டுள்ளார். இப்படி பல ஒற்றுமைகள் ஒரு போட்டோவில் இணைகிறது. இதற்கெல்லாம் சம்மந்தம் இல்லை என்றாலும், சம்மந்தப்படுத்தாமல் இருக்கவும் முடியவில்லை.