‛அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்..’ ரியல் ஐஸ்வர்யா போல் இருக்கும் ரீல் பேரழகி!
இன்ஸ்டாகிராமில் 2,50,000 ஃபாலோவர்ஸ்களை கொண்ட அஷ்மிதா, கஜோலின் குச் குச் ஹோத்த ஹே படத்தின் பாடலை டப் செய்து பதிவிட்டு இருந்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் அவரின் அழகுக்கு பேர் போனவர்.அவரை போன்ற சாயலில் உலகெங்கும் பல பெண்கள் உள்ளனர். அதில் ஆஷித்தா சிங் என்பவர் சமீபத்தில் வைரலாகி வருகிறார். தற்போது, ஆஷித்தா சிங் பார்பதற்கு 25 வயது ஐஸ்வர்யா ராய் போல் தோற்றமளிக்கிறார்.
ஆஷித்தா, அவரின் சோஷியல் மீடியா பக்கங்களில் பாலிவுட் வசனங்களுக்கும், பாடல்களுக்கும் லிப் சிங்கிங் செய்த குட்டி வீடியோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் உள்ள பல வீடியோக்கள், ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களின் வசனங்கள் ஆகும்.இன்ஸ்டாகிராமில் 2,50,000 ஃபாலோவர்ஸ்களை கொண்ட அஷ்மிதா, கஜோலின் குச் குச் ஹோத்த ஹே படத்தின் பாடலை டப் செய்து பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
இவரின் ரசிகர்கள், “ ஆஷ், வாவ் உங்கள் கண்கள் அழகாக உள்ளது, இளமை கால ஐஸ்வர்யாவே” என்றெல்லாம் கமண்ட்ஸ் பதிவி செய்துள்ளனர். இவர் ஒரு புறம் இருக்க, நீண்ட காலமாக காணாமல் போன ரியல் ஐஸ்வர்யா ராய் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் மூலம் கம் பேக் கொடுக்கவிருக்கிறார்.
இப்படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கல்கியின் நாவலில் நந்தினி என்பவர் பழிவாங்க பாம்பு போல் காத்திருக்கும் ஒரு நெகடீவ் கதாப்பாத்திரம். இதற்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா 1997-ல் இருவர் படத்திலும், 2007-ல் குரு படத்திலும் 2010-ல் விக்ரமுடன் ராவணன் படத்திலும் நடித்துள்ளார்.
View this post on Instagram
ஆக ஐஸ்வர்யா, பொன்னியின் செல்வன் படம் மூலம் மணிரத்தினத்துடன் நான்காவது முறையாக இணைகிறார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி,த்ரிஷா, ஜெயம் ரவி ஆகிய பலரும் நடிக்கவுள்ளனர். பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று, சின்ன மற்றும் பெரிய பழுவேட்டரையர்களின்
பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் பிரகாஷ் ராஜும் சரத் குமாரும் பார்க்க கம்பீரமாக இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.