நடிகை வரலட்சுமியின் தல பொங்கல் கொண்டாட்டம் வேற லெவல்..குடும்பத்துடன் வெளியிட்ட ரீல்ஸ்
சரத்குமாரின் சூர்ய வம்சம் படத்தின் காட்சியை தனது குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸாக பதிவிட்டுள்ளார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்
வரலக்ஷ்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாரராக கொண்டாடப்பட்டவர் நடிகர் சரத்குமார். அவரின் மகளும் பிரபலமான நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த ஜூலை 10ம் தேதி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணமும் தாய்லாந்தில் உள்ள பீச் ரிசார்ட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து கணவன் மனைவியும் சேர்ந்து தொடர்ந்து தங்கல் இன்ஸாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். வரலக்ஷ்மியின் கணவர் நிக்கோலாயுக்கு தமிழ் ரசிகர்கள் தங்கள் அன்மை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடும் வரலக்ஷ்மி
இந்த பொங்கலுக்கு பல்வேறு நடிகைகள் தங்கள் கணவருடம் தல பொங்கலை கொண்டாடி வருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் , ரம்யா பாணியன் , அதிதி ராவ் உள்ளிட்ட பலர் இந்த ஆண்டு தல பொங்கல் கொண்டாடி வருகிறார்கள். நடிகை வரலக்ஷ்மி தனது கணவர் மற்றும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தல பொங்கலை கொண்டாடி வருகிறார். மேலும் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படமும் வெளியாகி திரையரங்கில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொங்கல் கொண்டாட்டமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். சரத்குமார் நடித்த சூர்யவம்சம் படத்தின் புகைப்படம் எடுக்கும் காட்சியில் எல்லாரும் வந்தாச்சா என கேட்க மகன் சரத்குமார் மற்றும் ஓரமாக ஒதுங்கி நிற்பார். அதே மாதிரி சரத்குமாரின் மருமகன் நிக்கோலாய் இந்த வீடியோவில் ஒதுங்கி நிற்கிறார். குடும்பமே சேர்ந்து இப்படி ஒரு காமெடியான ரீல்ஸை வெளியிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
View this post on Instagram