மேலும் அறிய

Varalaxmi Sarathkumar: 1000 பிரச்சனைகள் இருக்கு; பொய் செய்தி பரப்புவதுதான் மீடியா வேலையா? - கொந்தளித்த வரலட்சுமி

நாட்டில் இருக்கும் பிரச்சனைக்கு ஊடகங்கள் குரல் கொடுக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்ததற்கு பின் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் இருப்பதாக வெளியாகும் செய்திக்கு வரலட்சுமி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கிய ட்விஸ்டாக யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இந்த அறிவிப்பு அந்த கட்சி நிர்வாகிகளிடம் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால் நடிகர் சரத்குமார் அவரது கட்சியை பாஜகவில் இணைத்ததற்கு பின்னால் அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனை மறுக்கும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், “நமது திறமையான ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் அன்பான பத்திரிக்கையாளர்களே, குறிப்பாக சுயமாக அறிவித்துக்கொள்ளும் செய்தித் தளங்கள் ஏன் உண்மையான செய்தியை ஒளிபரப்பக்கூடாது! பிரபலங்களிடம் இருக்கும் குறைகளைக் கண்டறிவதை நிறுத்துங்கள், நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். நாட்டில் 1000 பிரச்சனைகள் உள்ளது அதில் கவனம் செலுத்துங்கள். நமது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகள் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். மேலும் எங்களைப் பெருமைப்படுத்தும் பத்திரிகையை மீண்டும் கொண்டு வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? 

கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடற்கரை பகுதியில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட  300 கிலோ போதைப் பொருள், துப்பாக்கிகள் ஆகியவற்றை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக முதலில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ)  மாற்றப்பட்டது. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் மேலாளர் ஆதிலிங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சம்மன் அனுப்பப்படவில்லை என நடிகை வரலட்சுமி மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். இது போன்ற சூழலில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மகளின் பெயர் அடிப்பட்டதால் இந்த நடவடிக்கை சரத்குமார் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
Embed widget