மேலும் அறிய

Vanitha Vijayakumar: பிரபுதேவா மீது காதல்.. நடிகை வனிதா வாழ்க்கையில் விளையாடிய விதி!

பிரபுதேவாவை காதலிக்கவில்லை என்றால் நான் கண்டிப்பாக சினிமாவுக்கு வந்திருக்கவே மாட்டேன். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது.

நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவுடனான தனக்கிருந்த நட்பு பற்றி நடிகை வனிதா விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாரம்பரியமிக்க சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் வனிதா விஜயகுமார். இவரது அப்பா விஜயகுமார், அம்மா மறைந்த நடிகை மஞ்சுளா, சகோதரான அருண் விஜய்,  சகோதரிகளாக ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி, கவிதா என பலரும் சினிமாவில் நடித்துள்ளனர். வனிதாவுக்கு அடையாளமே தேவையில்லை என்னும் அளவுக்கு தன்னுடைய வெளிப்படையான, தைரியமான பேச்சுகளால் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். 

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இவரின் ரசிகர் பலம் எகிறியது. தொடர்ந்து தனது மகளான ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள செய்தார். இப்படியான நிலையில் வனிதா விஜயகுமார் அளித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

அதில் பேசும் அவர், “பிரபுதேவாவை காதலிக்கவில்லை என்றால் நான் கண்டிப்பாக சினிமாவுக்கு வந்திருக்கவே மாட்டேன். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது. லவ் பண்ணா அவரை தான் பண்ண வேண்டும் என நான் முடிவே பண்ணிவிட்டேன். அப்போது என்னுடைய அப்பா விஜயகுமார் ராசையா படம் பண்ணிக் கொண்டிருந்தார். அந்த படத்தில் பிரபுதேவா தான் ஹீரோ. என்னோட நிலைமையை பார்த்து இந்த பொண்ணை விட்டால் வேலைக்கு ஆகாது என சொல்லி அவரை வீட்டுக்கு வர சொல்லி விட்டார். அப்போது வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது.

எங்க அக்கா கவிதா அங்கு இருந்தார். அவர் சரத்குமார் நடித்த கூலி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். கவிதா எனக்கு ரொம்ப நெருக்கமானவர். அவரிடம் ஒரு கேமரா இருந்தது. அப்போதெல்லாம் ஒருவரிடம் கேமரா இருப்பதே பெரிய விஷயமாக இருந்தது. பிரபுதேவா வந்து விட்டு கிளம்பும்போது ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டேன். சரி வாங்க என அவர் சொன்னார். கவிதா கேமராவை கிளிக் செய்தவுடன் அதில் ரோல் சுற்றும் சத்தம் கேட்டது. எனக்கு ஒன்றுமே புரியாமல் அக்காவை பார்க்கிறேன். அவர் போட்டோ எடுத்தாச்சு என தம்ப்ஸ் அப் காட்டுகிறார்.

நான் அந்த ஒரு போட்டோவுக்காக நைட்டு எல்லாம் வெயிட் பண்ணேன். காலையில போய் பிரிண்ட் போடலாம்ன்னு கடைக்கு போயிட்டு வந்து பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் நான் மட்டும் தான் இருந்தேன். பிரபுதேவாவின் தலை கட்டாகி இருந்தது. இதனைப் பார்த்து ஏய் கவிதா என அக்காமேல் கொலைவெறி தான் வந்தது” என வேடிக்கையான சம்பவத்தை வனிதா விஜயகுமார் பகிர்ந்திருப்பார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Embed widget