மேலும் அறிய
Simran: ”என்ன சிம்ரன் இதெல்லாம்” - தகதகவென ஆடவா : சிம்ரனின் வைரல் வீடியோ!
Simran: சிம்ரனும், சூர்யாவும் இணைந்து தகதகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி என ஆடவா பாடலுக்கு டான்ஸ் செய்த சிம்ரன்.

நடிகை சிம்ரன் வைரல் வீடியோ
Simran: தகதகவென் ஆடவா என்ற பாட்டுக்கு குஷியாட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்ரன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன், 40 வயதை கடந்த நிலையில் வில்லியாகவும், கவுரவ தோற்றத்திலும் நடித்து வருகிறார். பிரபு தேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த விஐபி நடத்தில் முதல் முறையாக நடித்த சிம்ரன், பின்னர், விஜய்யுடன் ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் மற்றும் பூவே பூச்சூடவா படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து அவள் வருவாளா, கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்களில் அஜித், விஜய், கால், பிரசாந்துடன் நடித்து நடனத்தில் அசத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த சிம்ரன் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான விஜய், அஜித்துக்கு பக்கா ஜோடியாக இருந்து வந்தார். விஜய், அஜித் உடன் சிம்ரன் நடித்த காம்போ படம் ஹிட் கொடுத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
2003-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் பிதாமகன். அதில் லைலா ஹீரோயினாக நடிக்க சிம்ரன், சிறப்பு தோற்றத்தில் நடிகையாக நடித்திருப்பார். அப்போது சிம்ரனை கடத்தி செல்லும் சூர்யாவுக்கு ஒரு நடனம் கொடுக்கப்பட்டிருக்கும். சிம்ரனும், சூர்யாவும் இணைந்து தகதகவென ஆடவா சிவ சக்தி சக்தி என ஆடவா பாடலுக்கு போட்டிப்போட்டு நடனமாடி அசத்தி இருப்பார்கள்.
View this post on Instagram
இந்த நிலையில் அந்த பாட்டுக்கு தற்போது சிம்ரன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 47 வயதாகும் நடத்தில் அசத்தும் சிம்ரனை பார்த்த ரசிகர்கள், "இப்படி பார்க்க பாவமா இருக்கு” என கமெண்ட் செய்து வருகின்றனர்
மேலும் படிக்க: Thalapathy Vijay: ரஜினி படத்தில் தேடிப்போய் வாய்ப்பு கேட்ட விஜய்! மறுத்த கே.எஸ்.ரவிகுமார் - காரணம் இதுதான்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















