மேலும் அறிய

'தவறு செய்துவிட்டேன்' : இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட ஷில்பா ஷெட்டி..!

பாலியல் வழக்கில் கணவர் கைதாகி போலீஸ் காவலில் இருக்கும் நிலையின், நடிகை ஷில்பா ஷெட்டி தான் தவறு செய்துவிட்டதாக இன்ஸடாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுல் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. 40 வயதை கடந்த போதும் யோகா, டயட், எக்ஸஸைஸ் என இருந்து பல இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

இந்தியில் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் விஜய்யின் குஷி படத்திலும் நடித்துள்ளார். குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார் ஷில்பா ஷெட்டி. இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ள இவர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார். ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட ராஜ் குந்த்ரா, அதற்கான ஆடிஷனில் பங்கேற்ற சில நடிகைகளை ஆடையின்றி நிர்வாணமாக நடிக்க கூறியதாக புகார் எழுந்தது. மொத்தம் 9 நடிகைகள் ராஜ் குந்த்ரா மீது இதுபோன்ற புகார்களை அளித்தனர்.

தவறு செய்துவிட்டேன்' : இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட ஷில்பா ஷெட்டி..!

இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் தொடர்பாக பேசிய வாட்ஸ்-அப் உரையாடல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது அலுவலகத்திலும் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பல ஆபாச பட சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. அதோடு ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டிலேயும் விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா ஷெட்டி குடும்ப மானமே போய்விட்டது என கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுததாகவும் தகவல் வெளியானது. 

இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதமே அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போதிய ஆதாரத்திற்காக காத்திருந்தது மும்பை போலீஸ். இந்நிலையில் ஆதாரங்களுடன் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர். தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படம் தயாரித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைதை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

ராஜ் குந்த்ரா மீது மாடல் அழகிகளும், நடிகைகளும் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக புகார் தெரிவித்து வருகிறார்கள். இதில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அவர் மனம் உடைந்து கணவரை கண்டித்து கண்ணீர்விட்டு அழுததாக கூறப்பட்டது. கணவர் மீதுள்ள கோபத்தில் ஜெயிலில் போய் பார்க்காமல் ஒதுக்கி விட்டதாகவும் பாலிவுட் வட்டாரம் கிசுகிசுத்தார்கள். 

தவறு செய்துவிட்டேன்' : இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட ஷில்பா ஷெட்டி..!

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறு செய்து விட்டதாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, “தவறுகள் செய்யாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன்'' என்ற வாசகத்தையும் வெளியிட்டு இருக்கிறார். ராஜ்குந்த்ராவை திருமணம் செய்ததைத்தான் தவறு செய்துவிட்டேன் என்று ஷில்பா ஷெட்டி சொல்கிறார் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

ஓரிரு நாட்கள் முன்பு, கணவர் கைதுக்கு பிறகு முதல் முறையாக நடிகை ஷில்பா ஷெட்டி சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். சேலையில் கெத்தாக போஸ் கொடுத்திருந்த ஷில்பா ஷெட்டி பவர்ஃபுல் மெஸேஜ் ஒன்றையும் ஷேர் செய்திருந்தார். 'ஒரு பெண்ணை விட உயர்ந்த சக்தி இல்லை' என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார் ஷில்பா ஷெட்டி. அவரது இந்த போட்டோவுக்கும் மெஸேஜுக்கும் அபிஷேக் பச்சன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

சூப்பர் டான்ஸர் சாப்டர் 4 ல் பங்கேற்றுள்ள ஷில்பா ஷெட்டி, போட்டியில் பங்கேற்றுள்ள ஒரு போட்டியாளருக்கு கஞ்சக் பூஜையும் செய்துள்ளார். ஷில்பா ஷெட்டி சூப்பர் டான்ஸர் சாப்டர் 4 நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி பங்கேற்க வேண்டியது. ஆனால் 19ஆம் தேதியே ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதால் அவரால் நிகழ்ச்சி பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து 3 வாரங்கள் ஷில்பா ஷெட்டி சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதனிடையே ராஜ் குந்த்ராவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா - 11 மணி வரை இன்று
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget