Samantha: பாடல் வரிகளை பகிர்ந்து மெசேஜ்.. ரசிகர்களின் மனதில் உயரும் சமந்தா..
நடிகை சமந்தா தனது இண்ஸ்டா பக்கத்தில் தனக்கு பிடித்த பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார்.வாழ்க்கைப் பற்றி மிகத் தீவிரமாக சிந்திப்பத்தை தான் நிறுத்திக்கொள்ளப் போவதாக கூறியுள்ளார் சமந்தா.
சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதனுடன் பாடல் ஒன்றை இணைத்து வெளியிட்டுள்ளார்.வாழ்க்கை பற்றிய தொடர்ச்சியான சிந்தனைகளை தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார் சமந்தா.
அண்மைக் காலங்களில் நடிகை சமந்தா தனக்கு பிடித்த பாடல் வரிகளை பகிர்ந்து வருகிறார். அவர் எந்த வரிகளை பகிர்ந்தாலும் அவரது ரசிகர்களால் அந்த வரிகளை தங்களது வாழ்க்கையோடு பொறுத்தி கமெண்ட் செய்கிறார்கள். சிறிது காலத்துக்கு முன்பு சமந்தா ஒரு பதிவிட்டிருந்தார். அதில் பல சமயங்களில் நான் நமது கண் முன் இருப்பதை பார்க்காமல், நமது மனதில் இருக்கும் ஒன்றை தேடுவதே நம் வாழ்க்கை மகிழ்ச்சியற்று இருப்பதற்கான முக்கிய காரணம் என கூறியிருந்தார்.
இதனை கண்ட அவரது ரசிகர்கள் பலர் அவர் கருத்தோடு ஒத்துப்போயினர். தற்போது அவர் தான் காரில் செல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிறர் பேசுவதை கேட்காமல் போகையில் நீங்கள் உங்களுக்குள்ளாகவே பேசத் தொடங்குகிறீர்கள் என்கிற வரிகளை பதிவிட்டுள்ளார். மேலும் வாழ்க்கைக் குறித்து அதிகமாக சிந்திப்பதை தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு அவரது ரசிகர்கள் பலர் பதிலளித்து வருகிறார்கள்
நடிகை சமந்தா தற்போது தனது வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்துகொண்டிருக்கிறார். அண்மையில் தனக்கு மையோசிடிஸ் என்கிற நோய் இருப்பதாக சமந்தா தெரிவித்திருந்தார்.இந்த நோய்க்கு சமந்தா ஹைபர்பாரிக் என்னும் கடுமையான சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகிறார் அவர். இது குறித்தான வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து அவரது திரைப்பட வாழ்க்கைக் குறித்தான பல கேள்விகள் எழுந்தன. அத்தகைய சூழலில் தான் தயாரிப்பாளர சிட்டிபாபு சமந்தாவை குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார். சமந்தாவிற்கு வயதாகிவிட்டதாகவும் இனிமேல் அவர் ஹீரோயினாக நடிக்க முயற்சிக்காமல் துணை நடிகராக நடிக்கலாம் என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு சமந்தா மிக நூதனமான முறையில் பதிலளித்திருந்தார். அவரது பதில் இணையதளத்தில் மிகவும் வைரலானது. கடந்த வாரம் சமந்த தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமந்தா தற்போது நடித்துள்ள குஷி திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப் பட்டது. பல திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் ஐஸ் டப் ஒன்றில் சமந்தா அமர்ந்த புகைப்படம் ஒன்று டிரெண்டானது.
தற்போது நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் சிடெடல் வெப் சிரீசின் இந்தியப் பிரதியில் நடித்து வருகிறார் சமந்தா. சமந்தாவின் நடிப்பில் அண்மையில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் அவரது அடுத்த திரைப்படங்களின் மேல் பெரும் ஆர்வம் குவிந்துள்ளது.