Actress Sadha : கல்யாணம் பண்ணிக்கிட்டா இது போயிடும்.. சதா கருத்துக்காக இணையத்தில் கலவரம் செய்யும் நெட்டிசன்கள்
திருமணம் செய்துக் கொண்டால் சுதந்திரம் போய்விடும் என தான் நினைப்பதாக பேட்டி ஒன்றில் பிரபல நடிகை சதா தெரிவித்துள்ளார்.
![Actress Sadha : கல்யாணம் பண்ணிக்கிட்டா இது போயிடும்.. சதா கருத்துக்காக இணையத்தில் கலவரம் செய்யும் நெட்டிசன்கள் Actress Sadha talks we lose our freedom by Marriage Actress Sadha : கல்யாணம் பண்ணிக்கிட்டா இது போயிடும்.. சதா கருத்துக்காக இணையத்தில் கலவரம் செய்யும் நெட்டிசன்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/6559e7d8ce06c73ffe24f3c4b8a4a1711689248219500572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருமணம் செய்துக் கொண்டால் சுதந்திரம் போய்விடும் என தான் நினைப்பதாக பேட்டி ஒன்றில் பிரபல நடிகை சதா தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் ரவி நடிப்பில் ‘ஜெயம்’ படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சதா. ஜெயம் படம் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட நிலையிலும் தெலுங்கிலும் சதா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்துக்காக ஃபிலிம்பேர் விருதையும் அவர் வென்றதோடு, ஏராளமான ரசிகர்களையும் பெற்றார்.
இந்த படத்தின் வெற்றியால் தமிழில் தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் உள்ளிட்ட படங்களில் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த சதா, கடைசி 16 ஆண்டுகளில் 3 படங்களில் மட்டுமே நடித்திருந்தார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு டார்ச்லைட் படத்தில் நடித்திருந்தார்.
சதா தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்த சதா, படத் தயாரிப்பிலும் களம் கண்டார். அப்படி அவர் வங்கியில் கடன் வாங்கி தயாரித்த டார்ச் லைட் படம் படுதோல்வி அடைந்தது. இதன்பின்னர் பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது. சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் சதா, 39 வயது ஆன போதிலும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார். அவர் எங்கு சென்றாலும் திருமணம் பற்றியே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் பேட்டி ஒன்றில், ‘திருமணம் செய்துக் கொண்டால் சுதந்திரம் போய் விடும். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விரும்பியதையெல்லாம் செய்கிறேன். திருமணம் செய்தால் இதெல்லாம் நடக்குமா என தெரியவில்லை. நம்மை புரிந்து கொள்ளாத மனிதர்களுடனான வாழ்க்கையைப் பற்றி என்ன சொல்வது? . பலர் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதற்கு திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது’ என சதா தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)