அந்த ட்ரெஸ்க்கு அப்படி கமெண்ட்!! வார்த்தைப் போர்.. இஷ்டத்துக்கு பேசுவீங்களா? கடுப்பான ரெஜினா!
நடிகை ரெஜினா கஸாண்ட்ரா பேட்டி ஒன்றில் நடிகையாக இருந்தால் என்ன மாதிரியான விமர்சனங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசியிருக்கிறார்.
நடிகை ரெஜினா கஸாண்ட்ரா பேட்டி ஒன்றில் நடிகையாக இருந்தால் என்ன மாதிரியான விமர்சனங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசியிருக்கிறார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், நான் இன்ஸ்டாகிராமில் ஒருமுறை ஒரு மஞ்சள் நிற ஆடையணிந்த புகைப்படத்தைப் பதிவேற்றியிருந்தேன். அது கொஞ்சம் பஃப்ஃபியான ட்ரெஸ். அந்த ஆடையில் நான் குண்டாக இருப்பதாக யாரோ ஒரு பெண் விமர்சித்திருந்துள்ளார். அதை நான் கவனிக்கவில்லை. அதைப் பார்த்த என் தோழி ஒருவர், ரெஜினா சினிமாவில் நடிக்கிறார். மக்களை மகிழ்விக்கிறார். ஆனால் நீங்கள் எதுவுமே செய்யாமல் வெட்டியாக மற்றவர்களை வசைபாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
பின்னர் அந்தப் பெண்ணும் என் தோழியும் மாறி மாறி கருத்து பகிர அந்த கமென்ட்ஸ் பக்கம் முழுவதும் ஒரே வார்த்தைப் போர் தான். அப்புறம் நான் அதை ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தேன். அதில், ஒரு நடிகையாக இருந்தால் இதுபோன்ற விமர்சனங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால் சமூகவலைதளங்களில் நீங்கள் அனானிமஸாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் சொல்லாதீர்கள் என்று பதிவிட்டிருந்தேன் என்றார்.
ரெஜினா கஸாண்ட்ரா இன்ஸ்டாகிராமில் விதவிதமாக புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்களும் இருக்கின்றனர்.
View this post on Instagram
அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள்: கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் பால்வடியும் முகத்துடன் வலம் வருவார் ரெஜினா கஸாண்ட்ரா. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வலம் வரும். ரெஜினா மிக இளம் வயதிலேயே நடிப்புத் துறைக்கு வந்தவர். அவர் ஆரம்ப நாட்களில் பட வாய்ப்பு தேடியபோது வெளிப்படையாகவே தன்னிடம் நிறைய பேர் அட்ஜஸ்ட் செய்வீர்களா என்று கேட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எனக்கு அப்போது 20 வயது இருக்கும் அப்போது ஒரு படத்திற்காக ஒரு தயாரிப்பாளர் என்னிடம் ஃபோனில் பேசினார்.
அப்போது அவர் பேச்சுவாக்கில் என்னிடம் நீங்கள் அட்ஜெஸ்ட் செய்வீர்களா என்று கேட்டார். அப்போது எனக்கு அதுபற்றி புரியவில்லை. என்னிடம் அவர் மீண்டும் மீண்டும் அட்ஜெஸ்ட் செய்வீர்களா என்று கேட்டார். அவர் மூன்றாவது முறை கொஞ்சம் விளக்கமாக அட்ஜெஸ்ட் செய்வீர்களா என்று கேட்டபோது தான் அவர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.
உடனே நான் அந்த ஃபோன் காலை துண்டித்தேன். சினிமா துறையில் மட்டும் அல்ல பணிபுரியும் பெண்கள் பலரும் இதுபோன்ற இன்னல்களை சந்திக்கச் செய்கின்றனர். சினிமாவில் அதிகமாக இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நடிகைகள் துணிச்சலாம் மறுக்கிறார்கள். மறுப்பு வடக்கே கொஞ்சம் கோபத்துடன் கடுமையாகவும் தெற்கே கொஞ்சம் நாசுக்காகவும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் நடிகைகள் மறுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.