Priya Bhavani Shankar: "இடுப்பு 4 இன்ச் பெருசா இருந்தா பிரச்னை இல்லை.. அழகுனா இதுதான்?" - ப்ரியா பவானி சங்கர் பளீர்!
நடிகை ப்ரியா பவானி சங்கர் அழகு குறித்து சில முக்கியமான கருத்துக்களையும், செலிபிரிட்டியாக இருப்பதனால் மனரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பேசினார்.
பிரியா பவானி சங்கர்..
செய்தி தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பிறகு மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார். தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் தற்போது சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.
தற்போது திருச்சிற்றம்பலம், பொம்மை, இந்தியன் 2, பத்துத்தல, யானை என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு வெப்சீரிஸ்லும் நடித்து வருகிறார். இதை விக்ரம் குமார் இயக்குகிறார்.
கேள்வி..பதில்..
இந்த நிலையில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் மிகவும் சீரியசான கேள்விகளுக்கு சீரியஸ் பதில்களை அளித்தார். அவர் அழகு குறித்து சில முக்கியமான கருத்துக்களையும், செலிபிரிட்டியாக இருப்பதனால் மனரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பேசினார்.
முன்ன அழகா இருந்தேன்…
அழகு குறித்த புரிதலை பேசுகையில், "இப்போதிருப்பதைவிட முன்பெல்லாம் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன். இதை விட கலர் கம்மியாதான் இருப்பேன், இன்னும் கொஞ்சம் குண்டா இருப்பேன். காலேஜ் பஸ்ல நிம்மதியா போய்ட்டு வருவேன். நாலு அஞ்சு இன்ச் இடுப்பு பெருசா இருக்கிறது பெரிய பிரச்சனை இல்ல. வெள்ளையா இருக்குறதுதான் அழகு, ஒல்லியா இருக்குறதுதான் அழகுன்னு சொல்றத நிறுத்தனும். என் மூலமா யாராவது ஒருத்தருக்கு அந்த கருத்து போய் சேர்ந்திருந்தா மன்னிக்கணும். இது என்னுடைய ஃபீல்டு கேக்குதுன்னு நான் நினைக்கிறேன். நான் என் முகத்தையும், உடம்பையும் மெயின்டெய்ன பண்ண வேண்டியது இருக்கு." என்றார்.
இப்போ மாறிட்டேனா?
தன் சுயம் எப்படி மாறி இருக்கிறது என்று பேசிய அவர், "முன்பெல்லாம் நம்மிடம் எல்லோருக்கும் பேச வேண்டிய அவசியம் இருக்காது. அப்போதெல்லாம் ரொம்ப ஈஸியா சொல்லிடலாம், நம்மிடம் நலலா பேசுறவங்க எல்லாம் நல்லவங்கன்னு தெரிஞ்சிக்கலாம். இப்போ அப்படி இல்ல, எல்லாருமே நல்லாதான் பேசுறாங்க. ஒருத்தங்க சொல்ற வார்த்தைகளுக்கு நான் ரொம்ப பயப்படுவேன். ரொம்ப ஈஸியா நம்மள தாக்கிட கூடியது வார்த்தையாலதான். அதனால எல்லாரிடமும் சுவீட்டா இருந்திட முடியுறது இல்ல. அப்போ நான் நானா இல்லையா நான் மாறிட்டேனான்னு கேட்டா அப்படி இல்ல, என்னை வெளிப்படுதிக்காம இருக்கேன் அவ்வளவுதான்", என்று கூறினார்.