“காதல் எதையும் செய்ய வைக்கும் போல” ... காதலருக்காக பிரியா பவானி ஷங்கர் செய்த மாஸ் சம்பவம்...
செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை பிரியா பவானி ஷங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானார்.
நடிகை பிரியா பவானி ஷங்கர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை பிரியா பவானி ஷங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானார். தொடர்ந்து வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த அவர், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
View this post on Instagram
தொடர்ந்து ஹரீஸ் கல்யாணுடன் ஓ மணப்பெண்ணே, அருண் விஜய்யுடன் யானை, தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அடுத்ததாக பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொம்மை, பத்து தல, இந்தியன் 2, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் பிரான்ஸ், அடுத்து பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என ஜாலியாக டூர் சென்றுள்ள பிரியா பவானி ஷங்கர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவர் ராஜவேல் என்ற நபரை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவருடன் தான் பிரியா பவானி ஷங்கர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டரில் செல்லும் பிரியா அங்கிருந்து பயிற்சியாளர் உதவியுடன் ஸ்கை டைவிங் செய்கிறார். முதலில் தனக்கு பயமாக இருப்பதாக தெரிவிக்கும் கண்ணை மூடிக் கொண்டு நடுவானில் இருந்து குதிக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அந்த வீடியோ கேப்ஷனில் என்னை இதைச் செய்ய வைத்ததற்கு நன்றி என்று ராஜவேலுவின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.