மேலும் அறிய

Annapoorani Box Office Collections: ‘அள்ளிக் கொடுத்த அன்னப்பூரணி’ - நயன்தாரா படத்தின் இரண்டாவது நாள் வசூல் இவ்வளவா?

அன்னபூரணி படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்துப் பார்க்கலாம்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.  அவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு பாலிவுட்டிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில்,  ரன்வீர் சிங்குடன் அவர் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலமும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலமும் அவர் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் என்றால் அது மிகை ஆகாது. 

பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த நயன்

தமிழிலும் நயன்தாரா பிஸியாகவே இருக்கிறார். நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த  இறைவன் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. தற்போது நயன்தாராவின் அன்னப்பூரணி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் அவருக்கு 75-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னப்பூரணி மையக்கரு

இத்திரைப்படத்தை,  இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். நயன் தாராவுடன் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூத்தை சேர்ந்தவராக நடித்திருக்கும் நயன், சமையல் கலைஞராக ஆசைப்படுவதும்; அதற்கு விழும் முட்டுக்கட்டைகளை நயன் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதையும் மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

அன்னப்பூரணி,  நயன்தாராவின் 75ஆவது படம் என்பதால் இது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும் படியாக கூட்டம் வந்ததாக சொல்லப்படுகிறது. 

அன்னப்பூரணி வசூல்

எனவே இத்திரைப்படம் முதல்நாளில் 60 லட்சம் ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்றைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிய வந்திருக்கிறது.  இரண்டாவது நாள் 90 லட்சம் வரை படம் வசூலித்துவிட்டதாம். எனவே அன்னப்பூரணி திரைப்படம்,  முதல் இரண்டு நாட்களில் 1.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக, பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 

மேலும் படிக்க 

Revanth Reddy: தெலங்கானாவில் காங்கிரஸ் கொடி.. முதல்வர் சந்திரசேகர ராவை கதற விடும் ரேமந்த் ரெட்டி! யார் இவர்?

Chhattisgarh Election Result 2023: ஆட்சியை கைப்பற்றும் பாஜக - காங்கிரசுக்கு சறுக்கல்..! சத்தீஸ்கரில் 11 மணி நிலவரம்

PM Modi: காங்கிரஸ்க்கு தண்ணீர் காட்டும் பாஜக! இன்று மாலை தொண்டர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget