Nayanthara : பட்டம் வேண்டாம்னு கெஞ்சினேன்..லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி நயன்தாரா பேட்டி
லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தால் தான் கற்பனை செய்ய முடியாத அளவு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளதாக நடிகை நயன் நயன்தாரா தெரிவித்துள்ளார்
நயன்தாரா
கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ஆனால் இந்த பட்டத்தால் தான் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்டர் சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் நயன்தாரா இதை பற்றி பேசினார்
லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி நயன்தாரா
" லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தால் நான் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்னுடைய கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய எல்லா பட தயாரிப்பாளரிடம் அந்த பட்டம் வேண்டாம் என்று கெஞ்சியிருக்கேன். ஏனால் நான் ரொம்ப பயப்படுகிறேன். அந்த பட்டம் என் கரியரரை தீர்மானிக்கக் கூடியது என்று நான் நினைக்கவில்லை. நான் யாருடைய பட்டத்தையும் பறிக்க நினைக்கவில்லை. அது எனக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் மக்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு மரியாதையால் எனக்கு அந்த பட்டத்தின் மேல் மதிப்பு இருக்கிறது. மற்றபடி நான் ஓவர்நைட்டில் யோசித்து இதுதான் எனக்கான பட்டம் என்று முடிவு செய்யவில்லை. நாம் ரொம்ப ஸ்மார்ட்டான உலகத்தில் வாழ்கிறோம். உங்கள் தேவைக்காக நீங்கள் மக்களை ஏமாற்றிவிட எல்லாம் முடியாது. நான் சிறந்த நடிகையாக இல்லாமல் இருக்கலாம் , சிறந்த டான்ஸராக இல்லாமல் இருக்கலாம் ஆனான் நான் இங்குதான் இருக்கிறேன். அது என்னுடைய கடுமையான உழைப்பால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஏதோ ஒன்று என்னிடம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. மற்றபடி எனக்கு இந்த பட்டத்தின் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை.
"The Kind of Backlash i had for #LadySuperstar title is unbelievable. I think there is a problem/Envy with men if they see a successful woman. I literally begged all my Producers/Directors to not put that Tag"
— AmuthaBharathi (@CinemaWithAB) December 12, 2024
- #Nayanthara pic.twitter.com/klenYzeaI5
ஆனால் ஒவ்வொரு முறையும் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தையும் என்னையும் வைத்து ஏதாவது சர்ச்சை வரும். குறிப்பாக ஆண்களிடத்தில் நான் இதை கவனித்திருக்கிறேன். ஒரு பெண் ஒரு ஆணை காட்டிலும் வெற்றிகரமாக இருந்தால் அது மற்ற ஆண்களையும் பெண்களையும் ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்கிறது." என நயன் தாரா தெரிவித்துள்ளார் .