பிரபுதேவா போட்ட அந்த ஒரு கண்டிஷன்...நயன்தாரா பிரபுதேவா பிரிவுக்கு காரணம் இதுதான்
நடிகை நயன்தாரா மற்றும் பிரபுதேவா காதலித்து வந்த நிலையில் இருவரின் பிரிவுக்கான காரணம் தற்போது வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது

நயன்தாரா
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அதே நேரத்தில் நயன்தாராவின் பெயர் சர்ச்சைக்குரிய விஷயங்களில் இடம்பெறுவதும் வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் தற்போது நயன்தாராவின் முன்னாள் காதல் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
பிரபுதேவா நயன்தாரா பிரேக் அப் காரணம்
வல்லவன் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா சிம்பு இடையில் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரது நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து சிம்புவுடன் பிரேக் அப் செய்தார் நயன்தாரா. சிம்புவைத் தொடர்ந்த் நயன்தாரா பிரபுதேவா காதல் கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. முதலில் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த இருவரும் ஒரு கட்டத்திற்கு மேல் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். பிரபுதேவாவிற்கு ஏற்கனவே நடிகை லதாவுடன் திருமணமாகி இருந்தது. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர். பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தார். நயன்தாராவுடனான காதலுக்குப் பின் தனது மனைவி லதாவை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.
பிரபுதேவா போட்ட மூன்று கண்டிஷன்
நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இருவரும் பிரிந்தார்கள். இந்த பிரிவுக்கு பிரபுதேவா நயன்தாராவுக்கு போட்ட கண்டிஷனே காரணம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் செய்துகொள்ள நயன்தாரா முதலில் மதம் மாற வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் பிரபுதேவா. மேலும் திருமணத்திற்கு பின் தனது குழந்தைகளை தனது குழந்தைகளாக நினைத்து வளர்க்க வேண்டும் என்பது அவரது இரண்டாவது கண்டிஷன். இந்த இரண்டு கண்டிஷனுக்கு நயன்தாரா ஓக்கே சொல்லியிருக்கிறார் . மூன்றாவதாக திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பை கைவிட வேண்டும் என்று பிரபுதேவா கூறியதாக இதற்கு உடன்பாடு இல்லாததால் நயன்தாரா பிரேக் அப் செய்துகொண்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா மற்றும் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இந்த தம்பதிக்கு உயிர் உலகு என இரு ஆண் குழந்தைகள் உள்ளார்கள்.




















